Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

72 வயதிலும் ஆசை! ‛மேஜிக் கண்ணாடியால் ஏமாந்த முதியவர்! மோசடி கும்பல் சிக்கியது எப்படி? திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 72 வயது நிரம்பிய முதியவரிடம் ‛மேஜிக் கண்ணாடி' உள்ளது. இதன் வழியே பார்த்தால் பெண்கள் ஆடையின்றி தெரிவார்கள் எனக்கூறி பணம் சம்பாதித்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் அவர்கள் சிக்கியது எப்படி? மோசடிக்கு அவர்கள் பயன்படுத்திய டெக்னிக் என்ன? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

ஒரு சில மனிதர்களுக்கு வித்தியாசமான சிந்தனைகள் வருவது உண்டு. இத்தகைய எண்ணங்கள் அவர்களை சிக்கலில் கூட பல சந்தர்ப்பங்களில் மாட்டிவிடும். அந்த வகையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வித்தியாசமான ஆசையால் பிரச்சனையில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

72 year old man wants to buy magic mirror to see people without dress, scam busted 3 arrested

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் அவினாஷ் குமார் சுக்லா (வயது 72). கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் தங்களிடம் ‛மேஜிக் கண்ணாடி' ஒன்று உள்ளது. அந்த கண்ணாடியின் வழியே மற்றவர்கள் ஆடையின்றி தெரிவார்கள். அதோடு எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களையும் நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய அவினாஷ் குமார் சுக்லா உடனடியாக அதனை வாங்க விருப்பம் தெரிவித்து ரூ.9 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த 3 பேர் கும்பல் பணத்தை வாங்கி கொண்டு அவரை ஏமாற்றியது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவினாஷ் குமார் சுக்லாவிடம் மோசடி செய்த 3 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் அவர்கள் யார்? அவினாஷ் குமார் சுக்லாவை குறிவைத்து எப்படி ஏமாற்றினார்கள்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பார்த்தா சிங்ரே. இவரது நண்பர்கள் மோலயா சர்க்கார், சுதிப்தா சின்ஹா ராய். இவர்களும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் வேகமாக பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ திட்டமிட்டனர். இதற்காக மோசடி வேலையில் இறங்கினர். அப்போது இவர்களிடம் சிக்கியவர் தான் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அவினாஷ் குமார் சுக்லா. 72 வயது நிரம்பிய இவரை தொடர்பு கொண்டு 3 பேரும் பேசியுள்ளனர்.

இவர்கள் 3 பேரும் அவினாஷ் குமார் சுக்லாவுக்கு ஏற்கனவே தெரிந்தவர் தான். நண்பர் வீரேந்திர துபே மூலம் 3 பேரும் அறிமுகம் ஆகியுள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும் பழங்கால பொருட்களை சேகரிக்கும் சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். எங்களிடம் ஒரு அதிசயமான ‛மேஜிக் கண்ணாடி' உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்த கண்ணாடியை பொதுவெளியில் மக்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். இந்த கண்ணாடியின் சிறப்பு என்னவென்றால் இதன் வழியாக பார்த்தால் பெண்கள் உள்பட ஆடையின்றி தெரிவார்கள். மேலும் எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களையும் நாம் முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம். இந்த அதிசய மேஜிக் கண்ணாடியை விற்பனை செய்ய உள்ளோம் என ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டுள்ளனர்.

இதை கேட்ட அவினாஷ் குமார் சுக்லா, கண்ணாடியை வாங்கி கொள்ள முடிவு செய்தார். இருப்பினும் விலை தான் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவினாஷ் குமார் சுக்லா மற்றும் 3 பேரும் பேரம் பேசினர். இதையடுத்து கோடியில் இருந்து மேஜிக் கண்ணாடியின் விலையை லட்சத்தில் விற்பனை செய்ய 3 பேரும் ஒப்புக்கொண்டானர். அவினாஷ் குமார் சுக்லாவும், மேஜிக் கண்ணாடிக்காக ரூ.9 லட்சத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தான் அவர்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஓட்டலில் வந்து மேஜிக் கண்ணாடியை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளனர். இதையடுத்து அவரும் புறப்பட்டு சென்று அங்கு அவர்களை சந்தித்தார். அப்போது தான் அவினாஷ் குமார் சுக்லாவுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. ஏனென்றால் அவர்கள் கொடுத்த கண்ணாடி ‛மேஜிக் கண்ணாடி' இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.

இதனால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவினாஷ் குமார் சுக்லா சம்பவம் தொடர்பாக நயாபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் அவினாஷ் குமார் சுக்லாவை ஏமாற்றிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.28 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன்கள் உள்பட விலை உயர்ந்த பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+