"நிர்வாணம்.. பலாத்காரம்.." அதுவும் ஆண்ட்டிகள் மட்டுமே குறி! போலீசாரை மிரள வைக்கும் சீரியல் கில்லர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தொடர்ந்து வயதான பெண்களைக் குறிவைத்துக் கடத்தி கொடூரமாகப் பலாத்காரம் செய்யும் நபரால் மாநிலமே அதிர்ந்து போயுள்ளது. இந்த சீரியல் கில்லரை இப்போது போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிலும் பெண்களைக் குறிவைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் சமீப காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளன.

இதனிடையே அப்படியொரு கொடூர சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 கொடூரம்

கொடூரம்

முதல் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் 5 டிசம்பர் 2022ஆம் தேதி நடந்தது.. மாவாய் பகுதியின் குஷெட்டி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் சிறு வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும், அவர் மாலை வரை வீடு திரும்பவில்லை என்பால் அஞ்சிய குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். இருப்பினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை தேடும் பணிகளைத் தொடங்கினர்.

 பலாத்காரம் கொலை

பலாத்காரம் கொலை

மறுநாள் டிசம்பர் 6ஆம் தேதி பெண்ணின் சடலம் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. பெண்ணின் உடல் நிர்வாணமாக ஆடையின்றி காணப்பட்டது. மேலும் பெண்ணின் முகம் மற்றும் தலையில் காயங்கள் இருந்தன.. இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதேபோல சில நாட்கள் இடைவெளியில் மற்றொரு சம்பவத்தில், 62 வயதான பெண் ஒருவர் இதேபாணியில் கொலை செய்யப்பட்டார்.. அவரது உடல் பாரபங்கி மாவட்டத்தில் வயலில் இருந்து மீட்கப்பட்டது.

 அடுத்தடுத்த சம்பவங்கள்

அடுத்தடுத்த சம்பவங்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி ததர்ஹா கிராமத்தில் மலம் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்ற பெண் ஒருவர் திடீரென மாயமானார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர், அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். இருந்த போதிலும், எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் அவரது உடல் காட்டுப்பகுதியில் உடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மூவருமே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருந்தனர். மேலும், இவர்கள் மூவருமே 50 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்.

 தேடுதல் வேட்டை

தேடுதல் வேட்டை

இந்த மூன்று சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பதைக் கண்டறிந்த போலீசார் அவனை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இப்போது தலைமறைவாக உள்ள அந்த சீரியல் கில்லரை போலீசார் தேடி வருகின்றனர். கொலையாளியை பிடிக்க பாரபங்கி போலீசார் 6 தனிப்படைகளை அமைத்துள்ளனர். சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், அந்த நபர் குறித்த தகவல்களைத் தெரிவிப்போருக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

சிக்கவில்லை

சிக்கவில்லை

கொலையாளியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட காவல்துறை, அவரைக் கண்டால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இப்போது ஆறு தனிப்படைகளும் சீரியல் கில்லரை தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அவர்களிடம் அந்த சீரியல் கில்லர் இதுவரை பிடிபடவில்லை.

 போலீசார் தகவல்

போலீசார் தகவல்

இது குறித்து போலீசார் கூறுகையில், "சில வாரங்களில் 3 பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து நாங்கள் நடத்திய விசாரணையில் மூன்று சம்பவத்திலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரிய வந்துள்ளது. சந்தேகப்படும் கொலையாளியின் படத்தை நாங்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளோம். அந்த நபரை இப்போது 6 தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம். விரைவில் நிச்சயம் அவரை பிடிப்போம்" என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+