கங்குவா ஹீரோயினுக்கு பிரச்னை.. தந்தையிடம் ரூ. 25 லட்சம் மோசடி.. நடந்தது என்ன?
லக்னோ: பல்வேறு கட்ட பிரச்னைகளுக்குப் பிறகு கங்குவா படம் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கங்குவா படப் பிரச்னையைத் தொடர்ந்து, கங்குவா நடிகையின் குடும்பத்தில் புதுப் பிரச்னை உருவாகியுள்ளது. நடிகை திஷா பதானியின் தந்தை ஜக்தீஷ் பதானிக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சூர்யா நடித்த படங்களிலேயே மிகவும் பெரிய படம் என்பதாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் சூர்யாவின் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை தற்போது மற்றும் 1070களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கங்குவா படத்தின் ட்ரெய்லர், டீசர், இசை வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தவிர படக்குழுவினர் ஒவ்வொருவரும் படத்தை பற்றிய பில்டப்களை ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இந்தியளவில் இந்தப் படம் மிகப்பெரிய சாதனையை படைக்கும்.
டிசம்பர் மாதம் பான் இந்தியா ரெக்கார்டுடன் வெற்றி விழா கொண்டாடுவோம். ஜிஎஸ்டி உள்ளிட்ட விவரங்களுடன் வசூல் ரிப்போர்ட்டை வெளியிடுவோம். கங்குவா பார்ட் 1 உடன் கூட யாராவது கிளாஷ் விடுவார்கள். ஆனால் கங்குவா பார்ட் 2 உடன் யாரும் கிளாஷ் விட மாட்டார்கள் என்று கூறியிருந்தார்.
சூர்யா, சிறுத்தை சிவா, ஒளிப்பதிவாளர் வெற்றி, மதன் கார்க்கி உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பலருமே கங்குவா குறித்து பயங்கர எதிர்பார்ப்புகளை தூண்டும் விதமான கருத்துகளை கூறியிருந்தனர். இந்நிலையில் கங்குவா படம் நேற்று வெளியானது. முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக படம் அமைந்துவிட்டதாக ரிவ்யூகள் வரத்தொடங்கின.
படம் பார்த்த பெரும்பாலான மக்கள் நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். முதல்நாளில் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.58.62 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் ரசிகர்களின் படத்தை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
முக்கியமாக படம் முழுவதுமே சத்தமாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரசிகர்கள் வைத்துள்ள குறைகளை சரிசெய்வோம் என கூறியிருந்தார். மேலும், திரையரங்க உரிமையாளர்களிடம் படத்தின் வால்யூமை 2 புள்ளிகள் குறைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கங்குவா படப் பிரச்னையைத் தொடர்ந்து, கங்குவா நடிகையின் குடும்பத்திலும் பிரச்னை கிளம்பியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் நடிகை திஷா பதானியின் ஜக்தீஷ் பதானிக்கு அரசியலில் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
கங்குவா படத்தின் கதாநாயகியான திஷா பதானியின் தந்தை ஜக்தீஷ் சிங் பதானி. உத்தரப்பிரதேசத்தின் பரேய்லியில் வசித்து வருகிறார். இவர் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், ஷிவேந்திர பிரதாப் சிங் என்பவர் ஜக்தீஷ் பதானியை தொடர்பு கொண்டு அரசியலில் உயர்ந்த பதவியை வாங்கித் தருவதாக அவரது ஆசையை தூண்டியுள்ளார்.
அவரது கூட்டாளிகளுடனும் ஜக்தீஷை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மேலும், இதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என்று கூறி ஜக்தீஷிடமிருந்து ரொக்கமாக 5 லட்சம் ரூபாயும், பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து 20 லட்சம் ரூபாயையும் ஜக்தீஷிடமிருந்து பெற்றுள்ளார். இந்நிலையில், ஜக்தீஷ் பணம் கொடுத்து மூன்று மாதங்களான நிலையில் அவருக்கு எந்தவிதமான பதிலும் வராமல் இருந்துள்ளது.
இதனால், ஜக்தீஷ் தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது, கண்டிப்பாக உயர் பதவி அளிக்கப்படும் என்று ஷிவேந்திர பிரதாப் கூறி சமதானப்படுத்தியுள்ளார். ஆனாலும், ஜக்தீஷ் தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, அரசியலில் உயர் பதவி வாங்கிக் கொடுப்பதாகக் கூறி தன்னை மோசடி செய்து பணம் பறித்துள்ளதாகக் கூறி ஷிவேந்திர பிரதாப், அவரது கூட்டாளிகள் மீது ஜக்தீஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications