லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாஸ்டர் மைண்ட்.. 'உபி' தேர்தல் வியூகத்தை ஆரம்பித்த அமித்ஷா.. சந்தித்த அனுப்பிரியா படேல்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு இப்போதே பாஜக மேலிடம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியின் மூத்த தலைவர் அனுப்பிரியா படேலை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

அப்போது அவர் உத்தரப்பிரதேசத்தில் தங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவியும், மத்திய அமைச்சரவையில் ஒரு இடமும் வேண்டும் என்று கேட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இரண்டு முறையும் வருவதற்கு முக்கிய காரணமே உத்தரப்பிரதேசம் தான். அங்கு தான் நாட்டிலேயே அதிகமாக 80 எம்பிக்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் 80 இடங்களில் 71 இடங்களை பாஜக வென்று அசத்தியது. இதற்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவும் முக்கியமான பார்க்கப்பட்டது.

2017 தேர்தல்

2017 தேர்தல்

கடந்த 2017 சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளை காலி செய்து பாஜக ஆட்சிக்கு வந்தது. அப்போது பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் ஒன்பது சட்டமன்ற இடங்களை வென்றிருந்தது. பாஜக உடன் 2014முதுல் அப்னா தளம் கூட்டணியில் இருக்கிறது.

அமித் ஷா வியூகம்

அமித் ஷா வியூகம்

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறம் சட்டசபை அதிக இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று பாஜக ஆர்வம் காட்டுகிறது. அதற்காக கூட்டணி கட்சிகளை பாஜக டெல்லி மேலிடம் பேசிவருகிறது. அமித்ஷாவே நேரடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிக்கான வியூகம் குறித்து இப்போதே உத்தரப்பிரதேச தலைவர்களை அழைத்து பேசி வருகிறார்.

வைத்த டிமாண்ட்

வைத்த டிமாண்ட்

அந்த வகையில் தான் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளத்தை அழைத்து அமித்ஷா பேசினார். அப்போது அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா படேல், உத்தரப்பிரதேசத்தில் தங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவியும், மத்திய அமைச்சரவையில் ஒரு இடமும் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. நிஷாத் சாம்ராஜ் உள்ளிட்ட மற்ற உத்தரப்பிரதேச கட்சி தலைவர்களையும் அமித்ஷா அழைத்து பேச உள்ளாராம்.

தொடக்கம் இது

தொடக்கம் இது

உபியின் குர்மிக்களிடையே ஆதரவைக் கொண்ட கட்சி அப்னா தளம்,. கடந்த 2019 தேர்தலின் போது பாஜக கூட்டணி கட்சிகளை கண்டு கொள்ளவில்லை" என்று குற்றம் சாட்டி விலகுவதாக அச்சுறுத்தியது. ஆனால் பாஜக மேலிடம் சமாதானம் காரணமாக அவர் முடிவை கைவிட்டிருந்தார். இந்நிலையில் யோகி ஆதித்யாநாத்தும் இன்று டெல்லி வந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி கட்சியினரை அணுசரித்து, கொரோனாவை சமாளித்து, பிரதமர் மோடியின் செல்வாக்கை நிலைநிறுத்தி வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. அதற்கான தொடக்கம் தான் கூட்டணி கட்சிகளுடனான சந்திப்பாம்.

English summary
BJP has started its outreach to allies in Uttar Pradesh ahead of next year's elections with Apna Dal's Anupriya Patel. Ms Patel was in Delhi on Thursday, where she met Union home minister Amit Shah, and, sources said,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X