யோகி ஆதித்யநாத்தின் அடுத்த சர்ச்சை.. விவாதமான கான்வர் யாத்திரை ‛ஆர்டர்’.. பரபரப்பில் உத்தர பிரதேசம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சிவ பக்தர்கள் கன்வர் யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள ஓட்டல்களில் உரிமையாளரின் பெயர் கட்டாயம். ஹலால் உணவு வகைகளை விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு தற்போது சர்ச்சையாகி உள்ளது. இந்த சர்ச்சைக்கு என்ன காரணம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யாநாத் உள்ளார். இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத்தின் அதிரடி நடவடிக்கைகள், உத்தரவுகள் அடிக்கடி விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தற்போது சிவ பக்தர்களின் கான்வர் யாத்திரை தொடர்பாக யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

yogi adityanath Uttar pradesh

அதாவது உத்தர பிரதேச மாநிலத்தில் சிவ பக்தர்கள் கான்வர் யாத்திரை செல்லும் சாலைகளில் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் கட்டாயமாக அதன் உரிமையாளர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்ற உத்தரவு தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதன் பின்னணி என்னவென்றால் இந்த கான்வர் யாத்திரையின்போது சிவ பக்தர்கள் சிவபெருமான் போன்று வேடமணிந்து கங்கை நதி நீரை சேகரித்து ஒவ்வொரு சிவன் கோவில்களுக்கும் சென்று அபிசேகம் செய்து வழிபடுவார்கள். அதாவது நமது ஊர்களில் முருகனுக்கு பக்தர்கள் காவடி சுமந்து கோவில்களுக்கு நேர்த்தி கடன் செய்து வழிபாடு மேற்கொள்வதை போல் வடமாநிலங்களில் சிவ பக்தர்கள் கான்வார் யாத்திரை செல்வார்கள்.

இந்த யாத்திரைக்கு முன்பாக அவர்கள் விரதம் இருப்பார்கள். அதன்பிறகு தான் இந்த யாத்திரையை தொடங்குவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த யாத்திரை என்பது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும். இந்த ஆண்டு ஷ்ரவண மாதமான ஜூலை 22ம் தேதி இந்த யாத்திரை தொடங்கி ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் சிவ பக்தர்கள் ஹரித்வார், கவுமுக், கங்கோத்ரி உள்பட பல இடங்களுக்கு பாதயாத்திரையாக சென்று கங்கை நதியில் இருந்து புனித நீர் சேகரித்து வந்து சிவாலயங்களில் அபிசேகம் செய்து வழிபடுவார்கள். இத்தகைய சூழலில் தான் சிவ பக்தர்கள் செல்லும் சாலைகளில் உள்ள கடைகளின் போர்டுகளில் உரிமையாளரின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் ஏறக்குறைய மாநிலம் முழுவதும் அனைத்து பெயர் பலகைகளிலும் உரிமையாளரின் பெயர் இடம் பெற வேண்டும். ஏனென்றால் இந்த யாத்திரைக்கான பக்தர்கள் மாநிலம் முழுவதும் இருந்து செல்வார்கள்.

மேலும் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஹலால் உணவுகள் விற்பனை செய்வார்கள். உரிமையாளரின் பெயர் மூலம் அந்த ஓட்டல்களை தவிர்க்க முடியும் என்பதால் இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஏற்கனவே இதுபோன்ற உத்தரவை முசாபர்நகர் போலீஸ் பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அந்த உத்தரவு நேற்று வாபஸ் பெறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் பிறப்பித்து இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+