Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுயமாக சம்பாதிக்கும் பெண்ணுக்கு.. ஜீவனாம்சம் தேவையில்லை! உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: திருமண முறிவுக்கு பிறகு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது பெண்களுக்கு உள்ள சட்டப்பாதுகாப்பு. ஆனால், சுயமாக சம்பாதிக்கும் பெண்ணுக்கு விவாகரத்து பெற்ற கணவன் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஜீவனாம்சத்தின் நோக்கம், திருமண உறவு முறிந்தால் அல்லது சட்டப்படி பிரிந்தால் நிதி ரீதியாக, பலவீனமான இணையரின் வாழ்க்கையை பாதுகாப்பதாகும். எனவே ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு தொகை வழங்கப்பட வேண்டும். இது பெண்களின் சுயமரியாதையான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துகிறது.

High Court crime

ஆனால், பெண்களின் பாதுகாப்புக்காக உள்ள இந்த சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்று தொடர்ந்து விமர்சனங்கள் உள்ளன. திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்லி வேண்டுமென்றே ஜீவனாம்சத்தை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள், உழைப்புக்கும் வளர்ச்சிக்கும் எந்த பங்களிப்பும் செலுத்தாமல் சொத்தில் பங்கு கேட்கிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் சுயமாக சம்பாதிக்கும் பெண்ணுக்கு விவாகரத்து பெற்ற கணவர் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

அன்கித் சஹா நபருக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகியுள்ளது. ஆனால், கணவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்கவில்லை என்று கூறி, அவரது மனைவி நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி மதன் பால் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தான் கல்வியறிவு இல்லாதவர், எனவே வருமானத்திற்கு வழியில்லை என்று கூறி மனைவி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். ஆனால், மனைவி சொல்வது பொய் என்று கணவர் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டதாவது, "சம்பந்தப்பட்டவர் வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் ஒரு முதுகலைப் பட்டதாரி மற்றும் வெப் டிசைனர் என்று ஒப்புக்கொண்டார். மேலும், ஒரு நிறுவனத்தில் மூத்த விற்பனை ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்து மாதம் ₹34,000 சம்பளமாகப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமல்லாத குறுக்கு விசாரணையின்போது, அவர் மாதம் ₹36,000 சம்பாதிப்பதாக ஒப்புக்கொண்டார். வேறு எந்தப் பொறுப்புகளும் இல்லாத ஒரு மனைவிக்கு இந்தத் தொகை மிகக் குறைவானது என்று கூற முடியாது. அதேசமயம், கணவர் தனது வயது முதிர்ந்த பெற்றோர்களையும் பிற சமூகக் கடமைகளையும் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளார். எனவே அந்தப் பெண் தனது கணவனிடமிருந்து எந்த ஜீவனாம்சத்தையும் பெறுவதற்குத் தகுதியற்றவர் என்று நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர் வருமானம் ஈட்டும் பெண் என்பதால், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் திறன் கொண்டவர்" என்று உத்தரவிட்டிருக்கிறது.

உண்மையை மதிக்காத, முக்கிய உண்மைகளை மறைக்கும் வழக்குகளில் ஈடுபடும் மனுதாரர்களின் வழக்குகளை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று, தனது உத்தரவில் நீதிபதி தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+