உத்தரப்பிரதேசம்: துப்பாக்கியால் கொன்ற நபரை போலீஸார் கண்முன்னே கடுமையாக தாக்கிய கிராம மக்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரு கொலை குற்றவாளியை போலீஸார் முன்பு கிராம மக்கள் கடுமையாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

குஷிநகரில் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் அந்த நபரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து துப்பாக்கி சப்தம் கேட்டு அப்பகுதியில் கிராமத்தினர் கூடினர்.

Angry mob lynches murder accused in UP police personnel

இதனால் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார் அந்த துப்பாக்கி ஆசாமி. பின்னர் அந்த கிராம மக்களை அச்சுறுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்தனர். அப்போது அந்த துப்பாக்கி ஆசாமியை பிடித்த கிராம மக்கள் அவரை கட்டை, இரும்பு ராடு கொண்டு சரமாரியாக தாக்கினர். இதில் நிலைக்குலைந்து விழுந்தார். விட்டால் போதும் என அந்த நபர் போலீஸில் சரணடைய முயன்ற போதும் மக்கள் அந்த நபரை விடாமல் தாக்கினர்.

இந்த தாக்குதலை தடுக்க போலீஸார் முயற்சித்தும் முடியவில்லை. இதுகுறித்து வீடியோ வைரலாகி வருகிறது. அந்த நபர் கோரக்பூரிலிருந்து குஷிநகருக்கு வருகை தந்தார். திடீரென ஏன் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+