உ.பி. தேர்தல்: அகிலேஷ் யாதவ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல்- வெளியேறுகிறது அப்னா தள்(கே)?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீட்டு சிக்கல் காரணமாக அப்னா தள்(கே) கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட தேர்தல் அடுத்த வாரம் நடைபெறும் நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது.

உ.பி. தேர்தல் களத்தில் இம்முறை பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான மெகா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தொகுதிகளில் சிக்கல்

தொகுதிகளில் சிக்கல்

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியில் அப்னா தள்(கே) இடம்பெற்றுள்ளது. இக்கட்சிக்கு மொத்தம் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தொகுதிகளை ஒதுக்குவதில் அப்னா தள்(கே) அதிருப்தி அடைந்துள்ளதாம். வாரணாசி, பிரக்யாராஜ் தொகுதிகள்தான் பிரச்சனைக்குரியனவாக மாறி உள்ளதாம்.

அப்னாதள்(கே) வெளியேறும்?

அப்னாதள்(கே) வெளியேறும்?

இதனையடுத்து அகிலேஷ் யாதவ் ஒதுக்கீடு செய்த 18 இடங்களையும் சமாஜ்வாதி கட்சியிடமே அப்னாதள்(கே) திருப்பி கொடுத்துவிட்டதாம். இதனால் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து அப்னா தள் (கே) வெளியேறக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதேபோல் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜன்வாதி கட்சி(சோசலிஸ்ட்) இன்னமும் தொகுதிகள் ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறதாம்.

மற்றொரு கட்சியும் அதிருப்தி?

மற்றொரு கட்சியும் அதிருப்தி?

இது தொடர்பாக ஜன்வாதி கட்சி(சோசலிஸ்ட்) தலைவர் சஞ்சய் சவுகான் கூறுகையில், சமாஜ்வாதி கட்சி தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் என காத்திருக்கிறோம். இதற்காக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. சவுகான் சமூகத்தை பாஜக ஏமாற்றி முதுகில் குத்திவிட்டது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சியை உ.பி.யில் அமைப்பதுதான் எங்களது இலக்கு என்றார்.

தேர்தல் கணிப்புகள்

தேர்தல் கணிப்புகள்

உ.பி.யைப் பொறுத்தவரையில் ஆளும் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். ஆனால் 2017 தேர்தலை ஒப்பிடுகையில் குறைந்தது 100 இடங்களை பாஜக இழக்கும் என்றும் களத்தில் சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்றும் இதுவரையிலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+