அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா LIVE: இந்தியாவில் புதிய சகாப்தம் - இன்றுதான் தீபாவளி- பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா பக்தி பரவச பெருவெள்ளத்துடன் நடைபெற்றது. ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதல் பூஜை நடத்தினார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், துறைசார் நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா லைவ் அப்டேட்டுகளை இப்பக்கத்தில் காணலாம்.

Ayodhya Ram Mandir Temple Inauguration Opening Ceremony News Updates and Highlights in Tamil

Jan 22, 2024, 5:53 pm IST

ஹரித்துவார் கங்கை நதி கரையில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. விளக்குகள் தயார் நிலையில் இருக்கின்றன.
Jan 22, 2024, 5:51 pm IST

அயோத்தி சரயு நதி கரையில் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்படுகின்றன
Jan 22, 2024, 5:50 pm IST

இது வரலாற்று சிறப்பு மிகக் நிகழ்வு; ஒவ்வொரு ஆண்டு நான் அயோத்திக்கு வருகை தருவேன்- ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த்
Jan 22, 2024, 5:13 pm IST

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் தனுஷ் பங்கேற்றார்.
Jan 22, 2024, 3:38 pm IST

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சனுடன் ராமர் கோவில் வளாகத்தில் பாஜக எம்பி ஹேமா மாலினி நடனமாடினார்
Jan 22, 2024, 3:37 pm IST

ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
Jan 22, 2024, 3:16 pm IST

ராமர் இந்தியாவின் நம்பிக்கை; ராமர் இந்தியாவின் அடித்தளம்; ராமர் இந்தியாவின் சட்டம்: ராமர் இந்தியாவின் கருத்து; ராமர் இந்தியாவின் பெருமை; ராமரே தலைவர்- ராமரே கொள்கை- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:51 pm IST

ராமர் கோவிலுக்கு வருகை தந்திருந்த அனைத்து பிரபலங்களுக்கும் பிரதமர் மோடி நேரில் சென்று நன்றி தெரிவித்தார்
Jan 22, 2024, 2:49 pm IST

இலக்கு உறுதியானதாக இருந்தால் எதையும் அடைய முடியும் என்பதற்கு ராமர் கோவில்தான் உதாரணம்- அயோத்தி ராமர் கோவில் வளாகப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார்
Jan 22, 2024, 2:48 pm IST

தேசத்தின் இளைஞர்கள் புதிய உத்வேகம் பெற வேண்ட்ம்; புதிய இந்தியாவை உருவாக்கும் ஆற்றல் இளைஞர்களிடம் இருக்கிறது- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:45 pm IST

நீங்கள் சாதாரணமானவன் என நினைத்தால் ராமருக்கு உதவிய அணிலை நினைத்து கொள்ளுங்கள்; ஜடாயுவின் போராட்டம், ராவணனுக்கு எதிரான முயற்சிகள் பாராட்டுக்குரியவை- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:43 pm IST

ஹன்மன், லட்சுமணனை வணங்குகிறோம்.சாகரில் இருந்து சராயு நதிக்கு வந்திருக்கிறேன். இதே கொண்டாட்ட மனநிலை நாடு முழுவதும் பரவி இருக்கிறது- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:42 pm IST

அனுமனின் பக்தி, சேவையை மனதில் கொள்ள வேண்டும்; பெரும் தவத்துக்கு, விரதத்துக்கு பின் ராமர் நமக்கு கிடைத்துள்ளார்; நூற்றாண்டுகால தியாகங்களுக்கு பலன் கிடைத்துள்ளது- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:41 pm IST

ராமர் கோவிலை கட்டிய கரசேவகர்களுக்கு கடன்பட்டுள்ளோம். இன்றைய நாளை ஆயிரம் ஆண்டுகள் மக்கள் நினைவில் வைத்திருப்பர்; ராமர் என்பது பிரச்சனை அல்ல- தீர்வு- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:40 pm IST

ஆதி காலத்தில் இருந்தே ராமபிரான் நினைவுகள் நம் இதயத்தில் இருந்து வருகிறது; இந்தியாவுக்கு இப்போது புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது; ராமபிரானின் ஆலயம் அமைந்துவிட்டது; எதிர்காலம் குறித்து சிந்திப்போம்- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:38 pm IST

நமது தியானத்தில் குறைபாடு இருந்தன; ராமருக்கு தாமதமாக கோவில் கட்டிவிட்டோம்; ராமர் நம்மை மன்னிப்பார் என நம்புவோம்- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:37 pm IST

ராமர் ஆலயம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கான ஆலயம்; நமக்கு உத்வேகம் அளிக்க இந்த கோவில் உதவும். ராமபிரான் அனைவருக்கும் பொதுவானவர்; எண்ணற்ற தியாகங்களுக்கு பின் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:36 pm IST

ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி பயணம் குறித்து அயோத்தி ராமர் கோவில் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டு உரையாற்றினார்.
Jan 22, 2024, 2:36 pm IST

ராமர் கோவில் கட்டியிருப்பதன் மூலம் அடிமை மனநிலைக்கு முடிவு கட்டிவிட்டோம்; ராமர் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் அயோத்தி திரும்பி வந்துவிட்டார். ராமர் வருகைக்காக பல ஆண்டுகாலம் அயோத்தி காத்திருந்தது- பிரதமர் மோடி
Jan 22, 2024, 2:35 pm IST

ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று தீபாவளியை கொண்டாடுகிறது; ராமர் புகழ் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்துள்ளது; இந்தியாவுக்கு இன்று புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது- பிரதமர் மோடி
Jan 22, 2024, 1:54 pm IST

அயோத்தியில் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் கலந்து கொண்டுள்ள பிராண பிரதிஷ்டை விழாவை காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் இருந்து மத்திய நிதியமைச்சர் திருமதி. @nsitharaman காணொலிக்காட்சி மூலம் கண்டு வருகிறார்.- நிர்மலா சீதாராமன் அலுவலகம்
Jan 22, 2024, 1:47 pm IST

ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன் ராமர் கோவில் பொதுக் கூட்டத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றி வருகிறார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் முழக்கங்களை எழுப்பினர்
Jan 22, 2024, 1:37 pm IST

பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோருக்கு அயோத்தி ராமர் கோவில் வடிவத்தை நினைவுப் பரிசாக வழங்கினார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
Jan 22, 2024, 1:34 pm IST

அயோத்தி ராமர் கோவில் வளாகப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி சற்று நேரத்தில் உரையாற்றுகிறார். இப்பொதுக் கூட்டத்தில் சுமார் 7,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
Jan 22, 2024, 1:31 pm IST

அயோத்தி ராமர் கோவில் திறப்பு நேரம் அறிவிப்பு: காலை 7 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை மாலை 6.30, இரவு 7.30 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சிகள்
Jan 22, 2024, 1:24 pm IST

அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை, வழிபாட்டுக்கு பின்னர் சாதுக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற பிரதமர் மோடி. சாதுக்கள் புடைசூழ பிரதமர் மோடிக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
Jan 22, 2024, 1:19 pm IST

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவிலில் பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வுகள் நிறைவடைந்தன. பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதல் பூஜை நடத்தி தீப ஆராதனை காட்டினார். பின்னர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி
Jan 22, 2024, 1:17 pm IST

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை, முதல் வழிபாட்டுக்குப் பின்னர் ராமர் சிலை முன்பாக நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி
Jan 22, 2024, 12:56 pm IST

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்
Jan 22, 2024, 12:54 pm IST

அயோத்தி ராமர் கோவில் கருவறை மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது; முன்னதாக ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிராண பிரதிஷ்டை சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+