இது இங்க எப்டி வந்துச்சு? காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பாஜக கொடிகள்! உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு
லக்னோ: உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஏராளமான பாஜக கொடிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் அமைந்து இருக்கும் காங்கிரஸ் மாநில தலைமை அலுவலகத்திற்குள் அக்கட்சியினர் செல்லும்போது அங்கு ஏராளமான பாஜக கொடிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த வீடியோ காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜீசன் ஹைதர் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.

வாய் திறக்காத காங்கிரஸ்
அதில், காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாஜக கொடிகளை சுற்றி நின்று அக்கட்சியினர் வேடிக்கை பார்க்கின்றனர். இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் ஹைதர் தெரிவிக்கையில், "இதை பார்க்கும்போது அங்கு விதமான சலசலப்பும் ஏற்பட்டதைபோல் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடைந்ததாக தெரியவில்லை.

விசாரணை
இந்த ஒரு சம்பவத்தை வைத்தே உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸின் நிலையை மதிப்பிட முடியும்." என்று கூறி இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. இது குறித்து அக்கட்சியின் இளம் தலைவர் ஒருவர் கூறுகையில், "இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அடையாளர் தெரியாத நபர்களின் செயலாகவே இது இருக்கும்." என்று கூறி இருக்கிறார்.

உபியில் பரபரப்பு
பாஜக கொடிகள் கண்டெடுக்கப்பட்ட இடம் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் என்பதால் இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஒரு பக்கம் பாரதிய ஜனதா கட்சி வலுவடைந்து சென்று கொண்டிருக்கும் சூழலில் அங்கு ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் மிகவும் நலிவடைந்து வருகிறது.

உட்கட்சிப்பூசல்
தேசிய காங்கிரஸில் இருப்பதைபோலவே உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் உட்கட்சிப்பூசல்கள் உள்ளன. அம்மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த அஜய் குமார் லல்லு 5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதுவரை மாநிலத்துக்கு புதிய தலைவரை அக்கட்சி நியமிக்கவில்லை. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நகராட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்ய பிரியங்கா காந்தி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யால் பறிபோகும் எல் முருகனின் மத்திய அமைச்சர் பதவி? பிரதமர் புதிய பிளான்! பாஜகவில் ஆபரேஷன் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
“தேர்தல் படுதோல்விக்கு பிறகு கூட.. திமுக பாடம் கற்கவில்லை!” காங். அமைச்சர் ராஜேஷ்குமார் சாடல்! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு












Click it and Unblock the Notifications