Go Corona Go... வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொரோனாவை வீழ்த்திய உ.பி. பாஜக பிரமுகர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பிரதமர் மோடி விளக்கு ஏற்றித்தான் வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.. இந்த அழைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டனர் பாஜகவினர்.

Recommended Video

    விளக்குகளை ஏற்ற சொன்ன பிரதமர்... பட்டாசு வெடித்த மக்கள்

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    BJP leader fires in the air to target Corona

    ஆனால் அதற்கும் மேலாக பாஜகவினர் நடத்திய கூத்துகள்தான் அடங்காத ரகங்கள். அகல் விளக்கு ஏற்றியதுடன் பட்டாசுகளையும் பரபரவென வெடித்து கொரோனா ஒழிக நாளை கொண்டாடி மகிழ்ந்தனர் பாஜகவினர்.

    இப்படி பட்டாசுகளை வெடிக்கப் போய் பல இடங்களில் தீ விபத்து நிகழ்ந்த துயர சம்பவங்களும் நடந்துவிட்டன. தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் Go Corona எதிர்ப்பு முழக்கங்களுடன் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

    இதில் உத்தரப்பிரதேச பாஜக பிரமுகர் மஞ்சித் திவாரி நடத்திய சேட்டைதான் அடேங்கப்பா ரகம். உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் ஜில்லா பரிஷத்தின் தலைவரான மஞ்சித், அகல் விளக்கு ஏற்றிய கையுடன் கைத் துப்பாக்கியை கையில் எடுத்தார்.

    கொரோனா வானில் வலம் வருவதாக நினைத்து Go Corona Go என நினைத்தபடி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது உறவினர்கள் உற்சாக முழக்கம் எழுப்ப கொரோனாவை துப்பாக்கியால் சுட்ட வீரமங்கையாக பெருமிதத்தை காட்டிக் கொண்டார் மஞ்சித்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+