உ.பியில் ஷாக்.. பட்ட பகலில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை.. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வீட்டு முன் நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த பாஜக பிரமுகரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேசமும் உள்ளது. இங்கு அடிக்கடி பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், தான் உத்தர பிரதேசத்தின் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள சம்பால் பகுதியில் பாஜக பிரமுகரான அனுஜ் சவுத்ரி தனது வீட்டு முன்பாக வைத்தே மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் உள்ளது. இந்த சம்பவத்தின் விவரம் வருமாறு: உத்தரபிரதேசத்தில் உள்ள மொரதபாத் மாவட்டத்தில் சம்பல் என்ற இடம் உள்ளது. பாஜகவின் உள்ளூர் நிர்வாகியான அனுஜ் சவுத்ரி தனது குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் அனுஜ் சவுதிரி போட்டியிட்டார்.
சம்பல் பகுதியில் உள்ள அஸ்மோலி பிளாக்கில் போட்டியிட்ட சவுத்ரி தேர்தலில் தோல்வி அடைந்தார். எனினும், இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சவுத்ரிக்கும் அங்குள்ள சிலருக்கும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மாலை தனது வீட்டருகே நடைபயிற்சி சென்று கொண்டு இருந்த அனுஜ் சவுத்ரியை, பைக்கில் வந்த மர்ம நபர்கள் பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில், நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அனுஜ் சவுத்ரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், வரும் வழியிலேயே அனுஜ் சவுத்ரி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
நெஞ்சை பதறவைக்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "இந்த கொலையில் இரண்டு பேர் மீது சந்தேகம் இருப்பதாக அனுஜ் சவுத்ரியின் குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்துள்ளோம். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications