“ஸ்டன்” ஆன உபி.. பசு காதல் தினம் கொண்டாடிய பாஜக அமைச்சர்! கோமியம், சாணமே உலகில் “பெஸ்ட்” என பேச்சு
காதலர் தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநில பாஜக அமைச்சர் தர்மபால் சிங் பசு காதல் தினத்தை கொண்டாடி உள்ளார்.
லக்னோ: நேற்று பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்திய விலங்குகள் நல வாரியத்தின் திரும்பப்பெறப்பட்ட அறிவிப்பை ஏற்று உத்தரப்பிரதேச மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் தர்மபால் சிங் பசு காதல் தினமாக கொண்டாடி இருக்கும் காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதியான நேற்று வேலண்டைன்ஸ் டே என்று அழைக்கப்படும் காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
காதலர்கள் தொடங்கி திருமணமான தம்பதிகள் வரை பலரும் தங்கள் காதலர்களுக்கும், துணைகளுக்கும் அன்பளிப்புகளை வழங்கி காதலர் தினத்தை கொண்டாடினார்கள்.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு
காதலர் தினம் என்றாலே இந்தியாவில் காதலர்களுக்கு அடுத்தபடியாக மதவாத அமைப்புகள்தான் நினைவுக்கு வருவார்கள். கல்லூரி வளாகங்கள் பூங்காக்கள், திரையரங்குகள், மால்கள் என பல்வேறு பொழுதுபோக்கு தளங்களுக்கு வரும் காதலர்களை மதவாத அமைப்பினர் பிடித்து கட்டாயப்படுத்தி தாலி கட்ட வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.

மதவாத இயக்கங்கள்
காதலர் தினம் எப்போதெல்லாம் வருகிறதோ அதற்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே மதவாத அமைப்புகள் அதற்கு போஸ்டர்களை ஒட்டி எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கை. காதலர் தினத்தில் ஒன்றாக சுற்றும் காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம் என்று அவர்கள் மிரட்டல் விடுப்பதுடன், பல முறை காதலர்களை தாக்கியும் உள்ளார்கள்.

இந்திய விலங்குகள் நல வாரியம்
இந்த நிலையில் மத்திய அரசின் இந்திய விலங்குகள் நல வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்ட அறிவிப்பு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. காதலர் தினம் கொண்டாடப்படும் அதே பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று Cow Hug Day எனப்படும் பசு தழுவுதல் தினத்தை இந்தியாவில் கொண்டாட அறிவுறுத்தி இருந்தது.

பசு தழுவுதல் தினம்
இந்த அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்திய விலங்குகள் நல வாரியத்தை பலரும் விமர்சித்தும், கேலி செய்தும் மீம்ஸ்களை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு காதலர் தினத்தை மறைமுகமாக எதிர்க்கும் வகையில் வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து விலங்குகள் நலவாரியம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் பசு தழுவுதல் தினத்தை கைவிடுவதாக தெரிவித்தது.

உபி பாஜக அமைச்சர்
இந்த நிலையில் நேற்று சென்னை உட்பட பல பகுதிகளில் இந்துத்துவ அமைப்பினர் காதலர் தினத்தை எதிர்த்து கல்லூரிகள், பொது இடங்களில் ஊர்வலகம், போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகியும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான தர்மபால் சிங் பசு தழுவுதல் தினத்தை நேற்று கொண்டாடினார்.

பசு காதல் தினம்
வெல்லம், ரொட்டி போன்ற உணவுகளை பசுக்களுக்கு வழங்கி மகிழ்ந்த அவர், பசுக்களை தாயாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். தொடர்ந்து அவர் பேசுகையில், "மூன்று தாய்கள் நமக்கு உள்ளார்கள். ஒன்று நம்மை பெற்று எடுத்த தாய். 2 வது பசு தாய். மூன்றாவது நமது பாரத தாய். நம் தாயின் மீது முதலில் அன்பு செலுத்த வேண்டும்.

சாணமும் கோமியமும் பெஸ்டு
பசு மற்றும் பாரத தாய்க்கு நான் 2 வது அன்பை செலுத்த வேண்டும். இந்த உலகில் பசுக்களின் சாணம் மற்றும் கோமியத்தை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை . அனைத்து மக்களும் என்னை போன்றே பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று பசு காதல் தினத்தை கொண்டாட வேண்டும்." என்று அறிவுறுத்தி உள்ளார்
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications