உ.பி.: பாஜகவிற்கு 235 தொகுதிகள்.. சமாஜ்வாதிக்கு 165 சீட் கிடைக்கலாம்! இந்தியா டிவி கருத்துக்கணிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜகபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, அடுத்த மாதம் 10ல் துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடக்கவுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்திரப்பிரதேச தேர்தலை நாடே உற்று நோக்கி வருகிறது

தேர்தல் களம்
உத்திரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க போராடி வருகிறது. அதே சமயம் சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவால் பலம் பெற்று வருகிறது. இந்த இரு கட்சிகளுக்குத் தான் போட்டி என்று முடிவாகிவிட்டது. அடுத்த முதல்வர் அகிலேஷ் யாதவா அல்லது யோகி ஆதித்யநாத்தா என்று கருத்துக் கணிப்புகள் நடைபெற்று வருகின்றன.

கருத்துக்கணிப்பு
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ஏபிபி சிவோட்டர் கருத்து கணிப்பு ஒன்றினை வெளியிட்டது. அதில், பாஜக 223 முதல் 235 இடங்களைப் பிடிக்கும் என்று தெரிவித்திருக்கிறது. இந்தியா டிவி கருத்து கணிப்பில், பாஜக 230 - 235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அகிலேஷ் யாதவ் கட்சி 160 - 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக் கணிப்பிலும் பாஜகவே மறுபடியும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ்
இதுவரை உத்தரப்பிரதேச தேர்தலுக்கான வந்துள்ளக் கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான நிலையில் இருப்பதையே உணர்த்தியுள்ளன. இரண்டு இலக்கங்களில் வெற்றி பெறுவதே சிரமம் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு ஏழு தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேசத் தேர்தலுக்கான இந்தியா டிவி கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச்த்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 230 முதல் 235 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு
தெரிவித்திருக்கிறது.

கோரக்பூரில் வெற்றி
சமாஜ்வாதி கட்சி 160 முதல் 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 7 தொகுதியும்,பகுஜன் சமாஜ் கட்சி 2 முதல் 5 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இந்தியா டிவி-யின் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. மேலும், கோரக்பூரில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் வெற்றி பெறுவார் என்றும் தெரியவந்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications