வாக்காளர்களை கவரும் இலவசங்கள்? உ.பி., கோவா பாஜக தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியீடு!
லக்னோ/பனாஜி: உத்தரப்பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களில் பாஜக இன்று தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறது. லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பனாஜியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் இந்த அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நாளை மறுநாள் முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பாஜக தேர்தல் அறிக்கை
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை கடந்த 6-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. லக்னோவில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். இந்த தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவருகிற ஏராளமான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மோடி பிரசாரம்
முன்னதாக பிஜ்னோரில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை கடுமையாக விமர்சித்தார். அப்போது, விவசாயிகளின் கவுரவத்தை பாஜகதான் மீட்டுக் கொடுத்தது; பல ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோரக்பூர் ஆலையை நாங்கள் திறந்து வைத்தோம். பொதுமக்களை தவறாக வழிநடத்துகிற தலைவர்களே இன்று இருக்கின்றனர். அவர்களால் உங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதா? என கேள்வி கேளுங்கள் என்றார்.

போலி சோசலிஸ்டுகள்
மேலும் போலி சோசலிஸ்டுகள் என அகிலேஷ் யாதவை சாடினார். மேலும் சமாஜ்வாதி கட்சியினர் தங்களது கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்தனர். இத்தகைய சுயநலவாதிகளின் செயலால் உத்தரப்பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியே பாழடிக்கப்பட்டது எனவும் மோடி சாடினார்.

கோவா தேர்தல் அறிக்கை
இதேபோல் கோவா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று வெளியிடுகிறார். பனாஜியில் நேற்று முன்தினம் இந்த தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. லதா மங்கேஷ்கர் மறைவால் இன்று வெளியிடப்பட உள்ளது. கோவாவில் சுற்றுலா துறைக்கான சலுகைகள் உள்ளிட்டவை பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்











Click it and Unblock the Notifications