உ.பி.யில் மீண்டும் யோகி கொடி.. பாஜக ஆட்சியை பிடிக்கும்.. ரிபப்ளிக் டே டிவி எக்ஸிட் போல்
உபி மாநிலத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன
லக்னோ: உபியில் பாஜகவே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று ரிபப்ளிக் டே வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி இன்று மார்ச் 7 வரை நடைபெற்றுவருகிறது.
அவற்றில் உத்தரகாண்ட், பஞ்சாப், கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. மணிப்பூர், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு என்பதால், மணிப்பூர், உத்தரப்பிரதேசத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், இரு மாநிலங்களில் மாலை 6 மணிக்குத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு, பிரபல செய்தி நிறுவனங்கள் எக்ஸிட் போல்- Exit Poll' எனும் தேர்தல் முடிவு கருத்துக்கணிப்பை வெளியிடவிருக்கின்றன. அதனால், அரசியல் கட்சியினர், அரசியல் நோக்கர்கள் என அனைவரும் இந்த எக்ஸிட் போல்' முடிவுகள் எப்படி இருக்கப்போகின்றன என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

அகிலேஷ்
காரணம், 300 இடங்களுக்கு குறையாமல் இடங்களை வென்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பிரச்சாரங்களில் தொடர்ந்து சொல்லி கொண்டே வந்தது.. 80 சதவீத மக்கள் பாஜகவுக்குதான் வாக்களிப்பார்கள் என்றார்கள். மற்றொரு பக்கம் கடந்த காலங்களில் தாங்கள் செய்த சாதனைகளையும் சொல்லி ஓட்டு கேட்டது.. இதற்கு நடுவில் அகிலேஷ் யாதவ்வையும் அட்டாக் செய்து கொண்டே இருந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ளது.

மெஜாரிட்டி
அதன்படி, இந்த முறை பாஜகவுக்கே மெஜாரிட்டி கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.. பாஜகவே அறுதிப்பெரும்பான்மை பெறும் என்று கணிப்பில் கூறப்பட்டாலும், வெற்றி பெறும் இடங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே தெரிகிறது.. சென்ற முறையை காட்டிலும் இந்த முறை குறைவான இடங்களிலேயே பாஜக வெற்றி பெறும் என்று அந்த கணிப்பு கூறுகிறது.. அதாவது இடங்கள் குறைவு, ஆனால் வெற்றி உறுதி என்பதே ரிபப்ளிக் டிவி தரும் எக்ஸிட் போல் ரிசல்ட் ஆகும்.

பாஜக
இம்மாநிலத்தின் ரிபப்ளிக் டிவி; பி மார்க் எக்ஸிட் போல் முடிவுகள் (மொத்தம் 403 தொகுதிகள்), இதில், பாஜக- 240 இடங்களை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது 262 முதல் 277 இடங்கள் வரை பாஜகவுக்கு கிடைக்குமாம்.. சமாஜ்வாதி - 11- முதல் 140 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 7 முதல் 17வரையும், காங்கிரஸ் 4, இதர 2 இடங்களையும் பிடிக்கும் என்கிறது அந்த கணிப்பு.,

மெஜாரிட்டி
பாஜகவுக்கே மெஜாரிட்டி கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.. பாஜகவே அறுதிப்பெரும்பான்மை பெறும் என்று கணிப்பில் கூறப்பட்டாலும், வெற்றி பெறும் இடங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே தெரிகிறது.. சென்ற முறையை காட்டிலும் இந்த முறை குறைவான இடங்களிலேயே பாஜக வெற்றி பெறும் என்று அந்த கணிப்பு கூறுகிறது.. அதாவது இடங்கள் குறைவு, ஆனால் வெற்றி உறுதி என்பதே ரிபப்ளிக் டிவி தரும் எக்ஸிட் போல் ரிசல்ட் ஆகும்.

குறைவான இடங்கள்
கடந்த 2017-ம் ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 41.4 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது... அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சி 23.6 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது.. அதேபோல, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 22.2 சதவீத வாக்குகள் கிடைத்தது... 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.. அதனால் இந்த முறையும் 300 இடங்களை பெறுவோம் என்று அக்கட்சி தலைவர்கள் சொல்லி வந்தனர்.. ஆனால் 300க்கும் குறைவான இடங்களைத்தான் பாஜகவால் பெற முடியும் என்று இந்த கணிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications