மயானத்தில் குவியல் குவியலாக எரியும் சடலங்கள்.. வைரலாகும் வீடியோ.. என்ன நடக்கிறது உ.பி.யில்?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரு மயானத்தில் கும்பல் கும்பலாக கொரோனா பாதித்து இறந்தோரின் உடல்கள் எரிக்கப்படுகின்றன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை. இதனால் மருத்துவமனை வாயிலிலேயே நோயாளிகள் இறக்கும் நிலை வடமாநிலங்களில் ஏற்படுகிறது.

கங்கை கரையோரம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையோரத்தில் சடலங்கள் மிதப்பதாக செய்திகள் வருகின்றன. இவை கொரோனா பாதிப்போரின் சடலங்களாக இல்லை வேறு சடலங்களாக என தெரியவில்லை. தினந்தோறும் கொத்து கொத்தாக ஆற்றங்கரையில் சடலங்கள் மிதப்பதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காசிப்பூர் மயானம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் காசிப்பூரில் ஒரு மயானத்தில் கொத்து கொத்தாக சடலங்கள் எரியும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. இதை பத்திரிகையாளர் வினோத் கபிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனாவால் உயிரிழக்கும் லட்சக்கணக்கானோருக்கு யாரும் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசு கூறி வரும் நிலையில் சடலங்கள் மொத்தமாக எரியூட்டப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனப்படுகொலைக்கு நிகராக இறந்தவர்களின் சடலங்கள் உத்தரப்பிரதேசத்தில் எரியூட்டப்படுகிறது என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
|
உண்மையான நிலவரம்
கொரோனா பாதிப்பின் உண்மையான நிலவரத்தை உத்தரப்பிரதேச அரசு மறைப்பதாகவும் நெட்டிசன்கள் கூறுகிறார்கள். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கங்கை நதிக்கரையில் குவியல் குவியலாக சடலங்கள் மிதந்து வரும் நிலையில் மயானத்தில் குவியல் குவியலாக சடலங்கள் எரிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications