நீர்ப்பாசனத்திற்கு இலவச மின்சார திட்டம்! விரைவில் உ.பி முழுவதும் அமல்படுத்தப்படும்.. யோகி உறுதி
லக்னோ: விவசாயிகளுக்கு நீர் பாசன வசதிக்காக உத்தரப் பிரதேச அரசு இலவச மின்சாரத்தை வழங்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு துறைகளில் யோகி அரசு அவ்வப்போது சில அதிரடி திட்டங்களையும், மாற்றங்களையும் அறிவித்து வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில், விரைவில் விவசாயிகளுக்கு நீர் பாசன வசதிக்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பாஜக இந்த வாக்குறுதியை கொடுத்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை இந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை. இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தன. இதற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதிலளித்துள்ளார். அதாவது, "2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இது தொடர்பாக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக 14 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். அதேபோல மின்சார கட்டணத்தை உயர்த்தும் எண்ணமும் எங்களுக்கு கிடையாது.

கடந்த ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் எதற்கும் முறையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே இந்த திட்டங்கள் அரசு குறிப்பில் மட்டும்தான் இருக்கிறது. இதுபோன்று பாஜக அரசு ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் செயல்படாது. இன்றைக்கு உத்தரப் பிரதேசத்தின் வேளாண் நிலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. கரும்புதான் மாநிலத்தின் முதன்மை பயிர் அதையே கடந்த கால ஆட்சியாளர்கள் அழித்துவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications