கவலை வேண்டாம்.. அடிப்படை வசதிகளில் உ.பிதான் 'டாப்'! பாஜக அரசு குறித்து யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச மக்களுக்கு சாலை, மின்சாரம், வீடுகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் பாஜக அரசு சிறப்பாக கட்டமைத்திருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ராமநவமி விழாவையொட்டி கோரக்பூரில் கன்யா பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த அவர் இக்கருத்தை கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நிலவி வரும் வேலையின்மை, உட்கட்டமைப்புகளில் உள்ள குளறுபடிகள், சாதி, மத பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் தீவிரமான விமர்சனமாக முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் யோகி ஆதித்யநாத் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.

கன்யா பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் மக்கள் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர், "உத்தரப் பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பான அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் சில குளறுபடிகள், சில பிரச்னைகள் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இந்த குறைகள் அனைத்தும் உடனுக்கு உடன் சரி செய்யப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் இங்கு யாருக்கும் வீடு இல்லை என்கிற நிலை இருக்கக்கூடாது. ஆகவே அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
விரைவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைவருக்கும் சொந்த வீடு உறுதி செய்யப்படும். அதேபோல நீங்கள் கொடுத்த மனுக்களில் சாலை வசதிகள் குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள். அனைத்து ஊரக பகுதிகளிலும் தரமான சாலை அமைக்கப்படுவதை உத்தரப் பிரதேச அரசு உறுதி செய்து வருகிறது. எனவே இது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல அதிக அளவிலான மின் கட்டணம் குறித்து பெண் ஒருவர் மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு தவணை முறையில் மின் கட்டணம் செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவருடைய மின் கட்டணத்தை குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும், காவல்துறை மற்றும் வருவாய் தொடர்பான பிரச்சனைகளில் உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். ஒட்டுமொத்தமாக உத்தரப் பிரதேசம் இதர மாநிலங்களுக்கு ஓர் உதாரணமாக இருந்து வருகிறது" என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மக்களவை தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. இதனையடுத்து பல்வேறு திட்டங்களை யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications