சூப்பர்ல.. அனைவருக்கும் வீடு.. "இந்த" மேட்டரில் தனிக்கவனம்.. நவீனமயமாகும் நகரங்கள்.. உபி பாஜக அதிரடி

உத்தரப் பிரதேசத்தின் நகரங்களை மறு கட்டமைப்பு செய்வது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கவனம் செலுத்தி வருகிறார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்யும் விதமாக 'உத்தரபிரதேச நகரமயமாக்கல் கொள்கை-2023ஐ' அம்மாநில முதலமைச்சர் மறு ஆய்வு செய்திருக்கிறார்.

எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையடுத்து உத்தரப் பிரதேசத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேபோல மாநில அரசு சார்பிலும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை யோகி ஆதித்யநாத் அரசு நடத்திக்காட்டியது. அதேபோல சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பட்ஜெட்டிலும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

Chief Minister Yogi Adityanath is focusing on restructuring the cities of Uttar Pradesh

மேலும், உட்கட்டமைப்பு வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியிருந்தார். இப்படி இருக்கையில் உட்கட்டமைப்பு தொடர்பாக பல புதிய அறிவிப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடு என்கிற திட்டம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "கடந்த 6 ஆண்டுகளில் நகரப்புறங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அபரிமிதமானது. இந்த வளர்ச்சி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்தக்கட்ட வளர்ச்சியானது முற்றிலும் சாத்தியமாக வேண்டுமெனில் அனைவருக்கும் வீடு என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதுதான் மக்களின் வளர்ச்சியாகும். அவர்களை விட்டு விட்டு வெறுமென கட்டிடங்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? எனவே இந்த வளர்ச்சி அனைவருக்கமானதாக இருக்க வேண்டும்.

நகரங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட இதற்கு முந்தைய நடவடிக்கைகளை நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். அதிலிருந்த பிரச்னைகளை கவனத்தில் கொண்டு, அதேபோல மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் நகர்ப்புற வளர்ச்சி கொள்கைகளை ஆய்வு செய்ய வேண்டும். இதன் அடிப்படையில் புதிய திட்டத்தை உருவாக்கில் அதனை அமல்படுத்த வேண்டும். புதிய திட்டத்தின்படி பொழுதுபோக்கு அம்சங்கள் அதாவது தியேட்டர், மால்கள், ஷாப்பிங் காம்பிளக்ஸ்கள் ஆகியவை பூங்காக்களுக்கு அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காவல்நிலையமும் அருகாமையில் இருக்கும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது" என்று யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+