கேம் சேஞ்ச்.. பொருளாதாரத்துடன் கல்விக்கும் முக்கியத்துவம்.. அடுத்த அதிரடியை கையில் எடுத்த உ.பி. யோகி
உத்தரப் பிரதேச அரசு கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பட்டியலிட்டுள்ளார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது உத்தரப் பிரதேசத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்மாநில வரலாற்றில் இல்லாத அளவு இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல சுகாதாரம், தொழிற் கட்டமைப்பு மற்றும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த உதவும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவை ஐந்து டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதில் உத்தரப் பிரதேச அரசும் அதன் மக்களும் பங்களிக்க விரும்புகின்றனர். அந்த வகையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் தற்சார்பு உத்தரப் பிரதேசத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும். மாநிலத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றதலிருந்து பல்வேறு தலைப்புகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல் பட்ஜெட் வேளாண் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டிருந்தது. இரண்டாவது பட்ஜெட் உள்கட்டமைப்பு மேம்பாடு, மூன்றாவது பெண்கள் வளர்ச்சி என தற்போது 7வது பட்ஜெட்டை நாங்கள் தாக்கல் செய்திருக்கிறொம். இந்த பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும். தற்போது மாநிலத்தின் வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. முந்தைய பட்ஜெட்டில் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 8 சதவிகிதமாக இருந்தது. தற்போது இது 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. கல்வியிலும் நாங்கள் அளப்பறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.

2017ம் ஆண்டுக்கு முன்னர் 5ம் வகுப்பு பயிலும் சிறார்களுக்கு ஹிந்தி முறையாக எழுத படிக்க தெரியாமல் இருந்தது. சுமார் 26 ஆயிரம் பள்ளிகள் மோசமான நிலையில் இயங்கி வந்தன. ஆனால் இதனை இந்த அரசு மாற்றி காட்டியிருக்கிறது. ஆபரேஷன் காயகல்ப் மூலம் ஏராளமான பள்ளிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. முன்பு அரசு பள்ளிகளில் 1.34 கோடி மாணவர்கள் பயின்றனர். இன்று இந்த எண்ணிக்கை 1.91 கோடியாக அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு இரண்டு சீருடைகள், புத்தகங்கள் மற்றும் ஷூ சாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் மதிய உணவின் தரமும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
குழந்தைகளிடம் சாதி, மத வேறுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களின் பாதுகாவலர்களுக்கு ரூ.1,200 அனுப்பப்பட்டு வருகிறது. அதேபபோல கிராமங்களில் ஒவ்வொரு வார்டிலும் டிஜிட்டல் நூலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு சர்வதேச அளவிலான கல்வியை கொடுக்க பிரதமர் ஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications