வளர்ச்சிக்கான பயணத்தில் நாட்டை முன்னோக்கி இழுத்துச் செல்லும் என்ஜினாக உ.பி இருக்கும்! யோகி பெருமிதம்
லக்னோ: வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உத்தரப் பிரதேசம் நாட்டின் என்ஜினாக மாறும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
யோகி ஆதித்யநாத் லக்னோவில் முதல்வர் டாஷ்போர்டை தொடங்கி வைத்த பின்னர் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசம் இந்தியாவின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் திறன் கொண்ட மாநிலமாகும். கடின உழைப்புடன் முயற்சியையும் இணைத்தால் மாநிலம் வேற லெவலுக்கு உயரும். தற்போது செயல்பட தொடங்கியுள்ள டாஷ்போர்டு, ஒவ்வொரு துறையின் வளர்ச்சியையும் கண்காணிக்கும். இத வெளியிடும் புள்ளி விவரங்கள் மிகவும் முக்கியமானதாகும்.

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆரோக்கியமான போட்டி உருவாக வேண்டும். நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதுடன் தரவுகளை சேகரிப்பதும், பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு காலக்கெடுவுக்குள் தீர்வு காண்பதும் இந்த புள்ளிவிர சேகரிப்பின் நோக்கமாகும். பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதே முதன்மை பணியாக இருக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகளின் போது கலவரம் ஏற்பட்டது. ஆனால், உத்தரபிரதேசத்தில் அமைதி நிலவியது.
அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்பாதவர்கள் அற்ப விஷயங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி சூழலை கெடுக்க முயற்சிக்கின்றனர். மாநிலத்திற்குள் திட்டமிடப்பட்ட எந்தவொரு நிகழ்வும் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை உறுதிப்படுத்த காவல்துறை அதிகாரிகள் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் மற்றும் பிற அரசு ஊழியர்கள் தாங்கள் பணியமர்த்தப்பட்ட மாவட்டத்தில் வசிக்க வேண்டும். அதிகாரிகள் நியமிக்கப்படாத மாவட்டத்தில் வசிப்பதை மாநில அரசு பொறுத்துக் கொள்ளாது. அரசு இடவசதி இல்லை என்றால், அதிகாரிகள் வாடகை வீடுகளில் தங்கி, உரிய நேரத்தில் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும்.
அனைத்து அரசு ஊழியர்களின் பணியும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும். காவல் நிலையங்களின் பணியை அந்தந்த காவல் துறைத் தலைவர்களும், மாவட்ட அளவிலான துறைகள் மாவட்ட ஆட்சியர்களும், கோட்ட அளவிலான துறைகளில் ஆணையரும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications