கங்கனாவின் ‘தேஜஸ்’ திரைப்படம் பார்த்து.. கண்கலங்கிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: தேஜஸ் திரைப்படம் பார்த்து விட்டு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்கலங்கியதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். தமிழில் தலைவி என்ற இணைய தொடர் நடித்து பெரும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்திலும் கங்கனா ரணாவத் நடித்து இருந்தார். கங்கனா ரணாவத் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத நடிகை. டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது அவர்களை அவதூறாக பேசியிருந்தார்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்தார். அப்போது கங்கனா கண்டனத்திற்குரிய கருத்தை தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். பரபரப்பான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் தேஜஸ் படம் அண்மையில் வெளியானது. ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தில் அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கங்கனா ரனாவத்: போர் விமானங்களை ஓட்டும் பெண் விமானியாக கங்கனா ரணாவத் இந்த படத்தில் நடித்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி படம் திரைக்கு வந்த போதும் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை. படத்தின் வசூலும் படக்குழுவினருக்கு திருப்திகரமாக இல்லை. போதிய வரவேற்பு இன்றி பல திரையரங்குகளில் காட்சிகள் கூட ரத்து ஆனது. இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கங்கனா ரணாவத், கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருகை தருவது குறைந்து விட்டது.
கொரோனாவுக்கு பிறகு அது மேலும் மோசமாகிவிட்டது. பல தியேட்டரக்ள் மூடப்படுகிறது. பல சலுகைகள் அளித்தாலும் கூட தொடர்ந்து ரசிகர்கள் வருகை என்பது சரிவில்தான் உள்ளது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது" என்று தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் வைத்திருந்தார்.
கண்கலங்கிய யோகி ஆதித்யநாத்: இருந்த போதிலும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லை. இதனால் கங்கனா ரணாவத் நடித்த பட தோல்வி அடைந்ததாக பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், தான், லக்னோவில் தேஜஸ் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் திரைப்படத்தை பார்த்தனர். நடிகை கங்கனா ரணாவத்தும் அவர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்தார்.

பின்னர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் கங்கனா ரணாவத், படத்தை பார்த்து விட்டு யோகி ஆதித்யாநாத் கணகலங்கியதாக பதிவிட்டுள்ளார். மேலும், இது பெண்களின் முன்னேற்றத்திற்கான படம் இல்லை. பெண்களின் சக்தியை பற்றிய படமாகும் என்று யோகி குறிப்பிட்டதாக கங்கனா ரணாவத் கூறியுள்ளார். மேலும் உத்தரகாண்ட் முதல்வர் படத்தை பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications