பால் உற்பத்தியை அதிகரிக்க புது யோசனை.. நந்த் பாபா பால் மிஷனை தொடங்கி வைத்தார் உபி முதல்வர் யோகி
லக்னோ: பால் துறை வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியில் உத்தரப் பிரதேசத்தை முன்னணி மாநிலமாக மாற்றும் முயற்சியில் உ.பி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 'நந்த் பாபா பால் மிஷன்' திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்திருக்கிறார்.
இந்த திட்டம் மூலம் பால் உற்பத்தியாளர்கள் தங்கள் பாலை கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நியாயமான விலையில் விற்க முடியும். மட்டுமல்லாது பால் மூலம் செய்யப்படும் பொருட்களை சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்வதற்காக வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டின் பசுக்களிலிருந்து பெறப்பட்ட பாலை கொண்டு உற்பத்தி செய்யப்பட் உணவு பொருட்களை சுவைக்க முடியும் என்று மாநில அரசின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாநிலத்தின் கால்நடை மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தரம்பால் சிங், நேற்று கிசான் பஜார் பகுதியில் 'நந்த் பால் மிஷன்' அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், "மாநிலத்தில் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் பாலுக்கு உரிய விலையை வழங்கவும், விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு நந்த் பால் திட்டம் நிச்சயம் கைகொடுக்கும். திட்டத்தை விரிவுபடுத்த மாநிலம் முழுவதும் 5 மாவட்டங்களில் 5 பால் பண்ணைகள் விரைவில் அமைக்கப்பட இருக்கின்றன" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications