இரவோடு இரவாக அமேதி காங்கிரஸ் அலுவலகத்தில் தாக்குதல்! பிரியங்கா பிரச்சாரத்திற்கு வரும் நேரத்தில் பரபர
லக்னோ: அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக 80 லோக்சபா சீட்களை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏழு தட்டங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.

அங்கு பாஜகவுக்கு எதிராக சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. இதனால் அங்கு அனைத்து தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
தாக்குதல்: இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மீது நேற்று நள்ளிரவு திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.. சத்தம் கேட்டு கட்சி தொண்டர்கள் அங்கு வரும் முன்பு, மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சாடல்: இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு பாஜகவினரே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள காங்கிரஸ், அமேதியில் தோல்வி பயத்தில் பாஜக வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகச் சாடியுள்ளது..
மேலும் காங்கிரஸ், "தோல்வியைக் கண்டு விரக்தியடைந்த பாஜகவினர் பயங்கர ஆயுதங்களை எடுத்து வந்து அமேதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தினர். காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அமேதி மக்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது, உள்ளூர் மக்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. அமேதியில் பாஜக படுதோல்வி அடைய போகிறது என்பதற்கு இதுவே சாட்சி" என்றார்.
படுதோல்வி உறுதி: காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஷ்ரினேட்டும் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அமேதியில் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.. போலீசார் வேடிக்கை மட்டும் பார்த்ததால் பாஜக தொண்டர்கள் தங்கள் ரவுடித்தனத்தை தொடர்ந்தனர்.. வாகனங்களை உடைத்தாலும் பிரச்சனை தீராது. மக்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டனர்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி: காங்கிரஸின் பிரியங்கா காந்தி இன்று ரேபரேலி மற்றும் அமேதியில் தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளார். அந்த பிரச்சாரத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபரான கிஷோரி லால் ஷர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
பிரியங்கா காந்தி இன்று அந்த இரு தொகுதிகளிலும் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். ராகுல் காந்தி இந்த முறை வயநாடு தொகுதியுடன் சேர்த்து ரேபரேலி தொகுதியிலும் களமிறங்குகிறார். ராகுல் காந்தி நாடு முழுக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருவதால் தேர்தல் முடியும் வரை ரேபரேலி மற்றும் அமேதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரத்தைக் கவனிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் வரும் மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications