கோலி VS கம்பீர்.. கோதாவில் குதித்த காங்கிரஸ் -“டெல்லி பாஜக எம்பி” என்று கூறி என்ன சொல்லி இருக்காங்க?
லக்னோ: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், பாஜக எம்பி காம்பீர் என்று விமர்சித்து இருக்கிறார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் சிங்வி.
கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியும் பாப் டூ பிளஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் சுற்று லீக் போட்டியில் நேற்று விளையாடின. உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸ்ஸி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதில் டூ பிளஸ்ஸி, கோலி ஆகியோர் மட்டுமே ஓரளவு ரன்களை குவித்தனர். அவர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் குறைவான ரன்களையே எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்களில் அந்த அணி 126 ரன்களை மட்டுமே எடுத்தது. சொந்த மைதானத்தில் எளிதான இலக்கை நோக்கி இறங்கிய லக்னோ அணி நிச்சயம் வெற்றிபெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பெங்களூருவின் அபாரமான பந்துவீச்சால் லக்னோ அணி 108 ரன்களிலேயே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிந்த பிறகு கோலிக்கும் கம்பீருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. மோதிக்கொண்ட இரு வீரர்களையும் பெங்களூரு கேப்டன் டூ பிளஸ்சி, லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல், லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உள்ளிட்டோர் தடுத்து சமாதானம் செய்ய முயன்றனர்.
இன்று காலை முதல் இந்த சம்பவம் குறித்தே ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோலி, கம்பீரின் போட்டிக்கான 100 சதவீத ஊதியமும் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது. கோடிக்கு ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களூரு அணி ரசிகர்களை பார்த்து அவர்களின் மைதானத்தில் கம்பீர் உதட்டில் விரல் வைத்து காட்டிய செய்கை விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த நிலையில் தற்போது பெங்களூருவின் நட்சத்திர வீரர் கோலியிடம் கம்பீர் மோதலில் ஈடுபட்டதை வைத்து கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். டெல்லியில் பாஜக எம்பியாக கவுதம் கம்பீர் உள்ள நிலையில், இதனை வைத்து பாஜகவை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கி உள்ளார்கள். இன்னும் 8 நாட்களில் கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு இதனை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

பாஜக எம்பியான கவுதம் கம்பீர் கர்நாடக அணியான பெங்களூருவையும், கர்நாடக மக்களையும், விராட் கோலியையும் தொடர்ந்து சீண்டி வருவதாக பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், கோலியுடம் நேற்றைய மோதலின்போது, கம்பீரிடம் தொகுதிக்கு சென்று வாக்களித்தவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வியும் இந்த பிரச்சனை தொடர்பாக கம்பீரை பாஜக எம்பி என்று சுட்டிக்காட்டி விமர்சித்து உள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "பா.ஜ.க எம்.பி., இந்த ஆக்ரோஷத்தை பயன்படுத்தி, அதிக பாரம் நிறைந்த கிழக்கு டெல்லி தொகுதியின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
ஹேசல்வுட் இல்லப்பா.. ஆர்சிபி பிளேயிங் 12ல் நடக்கும் 2 மாற்றங்கள்.. பெங்களூரில் ரன் மழைக்கு ரெடியா! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஐபிஎல் தொடரில் RCB இல்லை? பெயரை மாற்ற புதிய உரிமையாளர்கள் திட்டம்? வந்த திடீர் விளக்கம்












Click it and Unblock the Notifications