Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5வது டெஸ்ட்டும் பாசிட்டிவ்.. கனிகாவுக்கு என்னாச்சு.. அதிர வைக்கும் ரிசல்ட்.. சிகிச்சை தீவிரம்!

கனிகா கபூருக்கு 5வது டெஸ்ட்டிலும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: எப்படியாவது அடுத்த முறை டெஸ்ட்டில் நெகட்டிவ் வரும் என்று நம்பிக் கொண்டிருந்த கனிகாவின் நம்பிக்கையில் மண் விழுந்துள்ளது.. கனிகாவுக்கு 5வது முறையாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.. அதிலும் பாசிட்டிவ் என்றே ரிசல்ட் வந்துள்ளது.. இதனால் அவர் பயந்து போய் உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

    இந்திய பாடகியால் கொரோனா அச்சத்தில் தெ.ஆப்ரிக்க வீரர்கள்

    பாலிவுட் பாடகி கனிகா கபூர் சமீபத்தில் லண்டனுக்கு சென்று நாடு திரும்பினார்.. பிறகு தொடர்ச்சியாக 3 நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

    டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். இறுதியில் உடம்பு சரியில்லாமல் போகவும் ஆஸ்பத்திரிக்கு செக்-அப்புக்கு போனபோதுதான் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதியானது.

    லக்னோ

    லக்னோ

    இதையடுத்து, கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்... அங்கு அவர் ஒரு நோயாளி போல நடந்து கொள்ளவில்லை என்ற புகார் எழுந்தது.. ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு போதுமான ஒத்துழைப்பும் தராமல் அட்டகாசம் செய்ததாகவும் கூறப்பட்டது. கனிகாவால் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதால், கனிகாவை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

    அறிகுறிகள்

    அறிகுறிகள்

    எனவே, அறிகுறிகள் இருந்தும் அலட்சியமாக நடந்துகொண்ட கனிகாவின் மீது சரோஜினி நகர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு முன்புகூட கனிகாவுக்கு 3வதுமுறை கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டது.. அதிலும் அவருக்கு பாசிடிவ் என்றே உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 4வது முறையாக டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதிலும் பாசிடிவ் என்றே ரிசல்ட் வந்தது.

    நல்லா இருக்கேன்

    நல்லா இருக்கேன்

    இந்த 4-வது டெஸ்ட் ரிசல்ட் வந்தபிறகுதான் கனிகா கொஞ்சம் சீரியஸ் ஆனார்.. உடனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "உங்களுடன் என்னுடைய அன்பை பகிர்ந்து கொள்கிறேன்... எல்லாம் வீடுகளில் பாதுகாப்பாக இருங்க நண்பர்களே... உங்களுடைய அக்கறைக்கு நன்றி... ஆனால் நான் ஐசியூவில் இல்லை... இப்போ நான் நல்லா இருக்கேன்.. அடுத்தமுறை டெஸ்ட் எடுக்கும்போது எனக்கு நெகட்டிவ் வரும்ன்னு நம்புகிறேன்... என் வீட்டுக்கு போய் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பார்க்க நான் காத்து கொண்டிருக்கிறேன்" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

    நெகட்டிவ்

    நெகட்டிவ்

    இந்நிலையில் 5-வது முறையாக கனிகாவுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதிலும் பாசிட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது.. பொதுவாக கொரோனா நோயாளிகளுக்கு ஒவ்வொரு 48 மணி நேரமும் சாம்பிள்கள் சோதனை செய்யப்படும்... அந்த வகையில்தான் அடுத்தடுத்த டெஸ்ட்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனாலும் கனிகா கபூர் உடல்நிலை சமநிலையில் இருப்பதாகவும், பயப்படுவதற்கு ஒன்னுமில்லை என்றும் ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்படுகிறது. 5வது முறை டெஸ்ட்ரில் எப்படியும் நெகட்டிவ் வரும் என்று நம்பிக் கொண்டிருந்த கனிகா, இப்போது கவலையுடனும் பீதியிலும் உள்ளாராம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+