தனியாக இருந்த விதவை பெண்.. உதவிய ஆண் நண்பர்.. திரண்டு வந்து கிராம மக்கள்.. உபி ஷாக்!
விதவை பெண்ணுக்கு கிராம மக்கள் நூதன தண்டனை வழங்கினார்கள்
லக்னோ: விதவை பெண்ணுக்கு மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து.. ஊர்வலம் நடத்தி உள்ள கொடுமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட சில கிராமங்களில் கிராம பஞ்சாயத்துக்கள் நடத்தப்பட்டு, அதிலேயே குற்றங்களுக்கு தண்டனையும் தரப்பட்டு வருகின்றன.. இதில் எல்லை மீறும் அநியாயங்களும், அக்கிரமங்களும் நடக்கின்றன.. அப்படி ஒரு சம்பவம்தான் இது!
உத்தரப் பிரதேச மாநிலம் கனோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 37 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவன் 2 மாசத்துக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
அதனால், அந்த பெண் தனியாக வசித்து வந்தநிலையில், உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்து வந்துள்ளார். அப்போது ஒரு நண்பர் அவருக்கு உதவி செய்ய வந்துள்ளார்.. அந்த நண்பர் ஒரு மாற்று திறனாளி.
விதவை பெண்ணுக்கு ஒரு ஆண் எப்படி உதவி செய்யலாம் என்று கேட்டதுடன், அதை தவறாகவும் பெண்ணின் உறவினர்கள் புரிந்து கொண்டனர்.. வீட்டில் ரகளை பண்ணி பிரச்சனையை செய்ததுடன், விஷயத்தை கிராம மக்களிடம் வந்து சொல்லிவிட்டனர்.. உடனே பஞ்சாயத்து கூடியது.
எல்லாரும் ஊருக்கு நடுவில் ஒன்று சேர்ந்தார்கள்... விதவை பெண்ணுக்கும், அவரது நண்பருக்கும் மொட்டை அடித்தனர்.. பிறகு பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்புக்களாலேயே கடுமையாக தாக்கினர். வலி தாங்காமல் அந்த பெண் கதறி கதறி அழுதார்.. பிறகு ஊர்வலமாக கிராமத்தை சுற்றிலும் அழைத்து சென்றுள்ளனர்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அந்த வீடியோவில் மொட்டை அடிக்கப்பட்ட பெண் அழுதபடியே நடந்து செல்ல, அவருக்கு பின்னாடியே கிராம மக்களும் செல்கிறார்கள்.. குழந்தைகளும் அந்த கூட்டத்தில் உள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பெண்ணின் உறவினர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்... மேலும் விசாரணையும் நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications