"புஷ்பா புருஷன்கள்".. வேணாம்மா, அலறி அலறியே அடங்கிய கணவன் உயிர்.. அடங்காத மாதுரி.. மேடம் இப்ப 1,2,3,4
லக்னோ: ஜூஸில் விஷம் கலந்து தந்து கொல்வது, கூலிப்படையை வைத்து கொல்வது, என அடுத்தடுத்த கட்டத்துக்கு பெண்களின் கொடூரங்கள், அதிர்ச்சியை கிளப்பி கொண்டிருக்கின்றன.. இப்போது உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அதற்கு மேல் ஷாக்கை தந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா.. 28 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் மாதுரி.. கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது..
ஆரம்பத்தில் இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.. திடீரென கள்ளக்காதல் புகுந்து, இவர்களின் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டது.

நிறைய ஆண் நண்பர்கள்: மாதுரி அந்த பகுதியில் உள்ள ஆண்களுடன் சிரித்து சிரித்து பேசி வந்துள்ளார்.. ஆனால், இதை அப்போது பெரிதாக சிவா கண்டுகொள்ளவில்லையாம். இதற்கு பிறகுதான் லேசாக சந்தேகம் வந்துள்ளது.. எனினும் சந்தேகப்புத்தி படைத்தவர் என்று தன்னை மனைவி தவறாக நினைத்து கொள்ளக்கூடும் என்பதால், பொறுமையாக இருந்துள்ளார். அதற்கு பிறகுதான், ஜெய்ஹிந்த் ரகுவர் என்ற நபருடன் மாதுரிக்கு கள்ள உறவு இருப்பதை அறிந்து அதிர்ந்து போனார்.. இதற்குமேல் விடக்கூடாது என்று நினைத்த சிவா, மாதுரியை கண்டித்தார்..
இதுபோல் தவறாக யாருடனும் பழக கூடாது என்று அறிவுரை சொன்னார்.. ஆனால், மாதுரி அதை கண்டுகொள்ளவில்லை.. பிறகு குல்தீப் சதுர்வேதி என்ற நபருடன் மாதுரிக்கு கள்ள உறவு இருப்பது சிவாவுக்கு தெரியவந்தது.. இதைக்கேள்விப்பட்டு மேலும் அதிர்ந்து போன சிவா, அப்போதும் மாதுரியிடம் தகராறு செய்துள்ளார்.. மாதுரி எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.. இதனால், மாதுரியை சிவா கண்காணிக்க துவங்கினார்..

4 கள்ளக்காதலர்கள்: அப்போதுதான், ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி மட்டுமல்லாமல், சோடூ பரிஹார், தீன்தயாள் என மொத்தம் 4 பேருடன் மனைவிக்கு கள்ள உறவு இருந்ததை கண்டறிந்தார்.. இந்த 4 பேருடனும் ஒரே நேரத்தில் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் மாதுரி.. இதற்கு பிறகு, தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.. தனக்கு தினமும் அறிவுரைகளை தரும் கணவனை கண்டாலே மாதுரிக்கு பிடிக்கவில்லை.. கள்ளக்காதலுக்கு எப்ப பார்த்தாலும் தடையாகவே இருப்பதால், கொலை செய்ய மாதுரி திட்டமிட்டார். .
அதனால் 4 கள்ளக்காதலர்களையும் அழைத்து பேசினார் மாதுரி.. அவர்களும் சிவாவை கொலை செய்ய ஓகே சொன்னார்கள்.. அதன்படியே சம்பவத்தன்று, சிவாவை அழைத்து சென்று மது விருந்து தந்துள்ளார் மாதுரி.. போதை தலைக்கேறியதுமே, 4 கள்ளக்காதலர்களையும் ஸ்பாட்டுக்கு வரவழைத்து, கணவரை கொடூரமாக கொலை செய்தார்..
கூண்டோடு கைது: அதாவது ஒரே நேரத்தில் கள்ளக்காதலர்கள் மொத்த பேரும், சிவாவை அடித்தே கொன்றார்களாம்.. இந்த சம்பவம் குறித்து சிவாவின் சகோதரர் வினோத் போலீசில் புகார் தந்தார்.. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவாவின் மனைவி மாதுரி மற்றும் அவரது கள்ளக்காதலர்கள் 4 பேரும் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து அனைவரும் கைதாகி உள்ளனர்.. இவர்கள் மொத்த பேரும் இப்போது ஜெயிலில் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications