கொழுந்தனாரை காப்பாற்ற.. நிர்வாணமாக்கப்பட்ட அண்ணி! தலித் மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது கணவரின் சகோதரனை காப்பாற்ற, தலித் இளம்பெண் நிர்வாணமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தோடர்பாக இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தீவிரம்காட்டி வருகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கெரி பகுதியின் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்திருக்கிறது. ஊரில் இளம்பெண்ணின் கொழுந்தனாருக்கும், சில இளைஞர்களுக்கும் ஏற்கெனவே பஞ்சாயத்து இருந்திருக்கிறது. இது சமீப நாட்களாக உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. எனவே அடிக்கடி இளைஞர் மீது சிறிய அளவில் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதிக்கப்பட்ட இளைஞரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஒரு கட்டத்தில் டென்ஷனான வன்முறை கும்பல், கடந்த வியாழக்கிழமை கிராமத்தின் கரும்பு தோட்டத்திற்கு இளைஞரை தூக்கி சென்று தாக்குதல் நடத்தியுள்ளது. விவரமறிந்த கிராம மக்கள் இளைஞரை மீட்க கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளனர். ஆனால், தடுக்க முயன்றவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்திருக்கிறது. ஒருவர் தனது விரலை இழந்திருக்கிறார். இந்த சம்பவத்தை தடுக்க பாதிக்கப்பட்ட இளைஞரின் அண்ணி (தலித் சமூகத்தை சேர்ந்தவர்), முயன்றிருக்கிறார். ஆனால் அப்பெண்ணை வன்முறை கும்பல் தாக்கி நிர்வாணப்படுத்தியுள்ளது.
கிராம மக்கள் அனைவரின் முன்னிலையிலும், அப்பெண் படுகாயங்களுடன் நிர்வாணமாக நின்றிருக்கிறார். இதனையடுத்து, இளைஞரை அந்த கும்பல் விடுவித்திருக்கிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் 6 பேர் மீது பிஎன்எஸ் பிரிவு 191 (2), 191 (3), 115 (2), 352 (352), SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி சந்தோஷ் குமார் சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்த குற்றங்களை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தலித் அல்லது சிறுபான்மையினர் மக்கள் குற்றம் செய்யும்போது, அவர்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. ஆனால், அவர்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்கள் மட்டும் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications