"பாஜகவா? அப்படின்னா?".. ரகசியமாக வீடுகளுக்குள் நுழைந்து பட்டைய கிளப்பிய பெண் எம்பி.. அதிர்ந்த உ.பி.
சமாஜ்வாதிக்காக வாக்கு சேகரித்த பாஜக பெண் எம்பி
லக்னோ: ஒரு கட்சியில் இருந்து கொண்டு, இன்னொரு கட்சியில் வாக்கு சேகரித்துள்ளார் இளம்பெண் ஒருவர்.. இந்த அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை இந்த 7 கட்ட தேர்தல் நடந்து முடிய உள்ளது.
பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் இந்த தேர்தல் களத்தில் குதித்துள்ளன.. இதனால் 4 முனை போட்டி உபியில் நிலவுகிறது.. இதுவரை வெளிவந்த தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளை பார்த்தால், பாஜகவுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அகிலேஷ் யாதவ்
என்றாலும், இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது... பாஜகவைவிட, அகிலேஷூக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டிருக்கும் நிலையில், பாஜகவோ, வீட்டுக்குவீடு பிரச்சாரம் செய்யும் நிலைமைக்கு இறங்கியது. தேசிய தலைவர்களே வீதிகளில் இறங்கி பிரச்சாரத்தையும் மேற்கொண்டனர்.. மேலும், வாக்குப்பதிவுக்கு முன்பு பாஜகவில் இருந்து மூத்த அமைச்சர்கள், சீனியர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்..

பகுஜன் சமாஜ்
அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுவாமி பிரசாத் மவுரியா.. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராகக் கருதப்படுபவர்.. முதலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார்... பிறகு, பாஜகவில் இணைந்தார்.. பிறகு சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டார்.. பாஜகவில் இருந்து வந்ததால், இவருக்கு உடனே சீட் தந்தது சமாஜ் கட்சி.. குஷிநகர் மாவட்டத்தின் பஸில்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்... இவரை எதிர்த்து பாஜகவில் சுரேந்திரா குஷ்வாஹா போட்டியிடுகிறார்.

சங்கமித்ரா
சுவாமி பிரசாத் மவுரியாவின் மகள்தான் சங்கமித்ரா, பாஜகவில் எம்பியாக இருக்கிறார்.. இப்போது தேர்தல் பிரச்சாரத்திலும் இறங்கி உள்ளார்.. சுவாமி பிரசாத் ஆனால், தன்னுடைய சொந்த கட்சியான பாஜகவுக்கு வாக்கு சேகரிக்காமல், தன்னுடைய அப்பாவுக்கு அதாவது பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார். அதுவும் ஒவ்வொரு வீட்டிற்கும் ரகசியமாக சென்று யாருக்கும் தெரியாமல் அப்பாவுக்காக வாக்கு கேட்டுள்ளார்..

ரகசிய ஓட்டுவேட்டை
பஸில்நகரின் ஜவுரா முகுலி கிராமத்தில் இப்படி ரகசியமாக ஓட்டு வேட்டை நடத்தி உள்ளார்.. ஆனாலும் அங்கிருக்கும் பாஜகவினர் இதை பார்த்துவிட்டனர்.. வேறு வழியில்லாமல் ஓட்ட கேட்பதை நிறுத்திவிட்டு காரில் ஓடிப்போய் உட்கார்ந்து கொண்டார்.. இதை பார்த்துவிட்ட செய்தியாளர்களும் சங்கமித்ராவை சூழ்ந்து கொண்டு விட்டனர்.. அப்பாவுக்காக ஓட்டுக் கேட்டீர்களா என்று கேள்விகளை கேட்டதற்கு, அப்படியெல்லாம் இல்லை என்று நழுவி சமாளித்து கொண்டே அங்கிருந்து காரில் வேகமாக கிளம்பிசென்றார்.. ஆனாலும் சங்கமித்ரா மீது மாவட்ட பாஜக தலைமைக்கு புகார் பறந்துள்ளதாம்..!












Click it and Unblock the Notifications