கடவுளின் அவதாரம் என்ற மோடி! விரும்பாத யோகி? உ.பியில் பாஜகவிற்கு எதிராகவே வேலை பார்த்தாரா ஆதித்யநாத்?

Subscribe to Oneindia Tamil

லக்னோ; உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு எதிராகவே அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வேலை பார்த்து இருக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி 3ம் முறை வந்தால்.. தன்னுடைய அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என்று யோகி அங்கே பாஜகவிற்கு எதிராக சில பணிகளை செய்து இருக்கலாம் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் களத்தில் இருக்கும் நிர்வாகிகள், அரசியல் நிபுணர்களுக்கு தெரியும்.. நாடு முழுக்க மோடியின் இமேஜ்தான் பெரிது என்றாலும்.. உத்தர பிரதேசத்தில் மோடியை விட யோகி இமேஜ்தான் பெரிது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024

அங்கே மோடியை விட யோகிக்கே பெரிய பலம். இப்போதும் கூட யோகியை பிரதமராக கொண்டு வர ஆர்எஸ்எஸ் காய் நகர்த்தலாம் என்றும் சில அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள். பாஜக தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதனால்தான் இந்த முறை ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன.

இப்படிப்பட்ட நிலையில்தான் மோடி தன்னை "சவுக்கிதார்" என்ற நிலையில் இருந்து "கடவுளின் அவதாரம்" என்ற நிலைக்கு கொண்டு சென்றார்.

மோடி இமேஜ்: பாஜகவில் இத்தனை காலம் பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர், சூப்பர் ஹீரோ, ஏன் ரட்சகன் என்றெல்லாம் கூட வர்ணிக்கப்பட்டு வந்தார். இந்தியா கண்டத்திலேயே வலுவான தலைவர் என்றும் கூட வர்ணிக்கப்பட்டு வந்தார்.

ஆனால் இப்போது அதெல்லாம் போய் மோடியை கடவுளுக்கு இணையாக ஒப்பிடும் அரசியலை பாஜக எடுத்துள்ளது. சமீபத்தில் பாஜக மூத்த நிர்வாகி சம்பித் பத்ரா ஒடிசாவின் பூரியில் பிரதமரின் ரோட்ஷோவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, ​​​​கடவுள் ஜகந்நாத் பகவான் பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர் என்று கூறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கடவுளே மோடியின் பக்தர்தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மோடி கடவுள் இமேஜ்: ஒடிசாவில் பிரச்சாரத்திற்கு இடையே ஊடகம் ஒன்றிற்கு பேசிய பிரதமர் மோடி, நான் மனித பிறவியாக இருக்க வாய்ப்பு இல்லை, நான் பயாலஜி ரீதியாக பிறந்திருக்க வாய்ப்பு இல்லை.என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்; பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன்.

ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

யோகி - மோடி இமேஜ் யுத்தம்; மோடியின் இந்த கருத்துக்கு பின் மோடி vs யோகி இடையே நிகழ்வும் இமேஜ் யுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். யோகியின் வளர்ச்சியை விரும்பாமலோ.. அவருக்கு இருக்கும் ஆர்எஸ்எஸ் ஆதரவை விரும்பாமலே.. அவர் யோகி என்றால்.. நான் கடவுள் என்று மோடி முன்னிறுத்த தொடங்கியதாக கூறப்பட்டது. யோகியை விட பெரிய இமேஜாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்று மோடி இப்போது தன்னை கடவுளின் பிறவி, கடவுளின் தூதுவர் என்றெல்லாம் பேச தொடங்கி உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலை பார்த்த யோகி: முக்கியமாக 2029ல் யோகியை ஆர்எஸ்எஸ் முன்னிறுத்த வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு யோகி கூடுதல் நெருக்கம். ஆர்எஸ்எஸ் குரலை கேட்க கூடியவர். மோடி போல தன்னிச்சையாக இருக்க மாட்டார் என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறதாம்.

இப்படிப்பட்ட நிலையில்தான் இப்போது மோடி வந்தால்.. 2029ல் மீண்டும் பாஜக வருவது கஷ்டம். ஏனென்றால் 3 முறை ஆட்சி செய்தால் அதன்பின் ஆட்சிக்கு எதிரான மனநிலை வரும். 2029ல் யோகியை முன்னிறுத்தினால் சிக்கல். அப்போது யோகியை முன்னிறுத்தினால் பாஜக தோற்கும். யோகி பிரதமராக முடியாது என்று ஆர்எஸ்எஸ் கருதியதாக கூறப்பட்டது . இதன் காரணமாகவே அங்கே ஆர்எஸ்எஸ் பெரிதாக வேலை பார்க்கவில்லை. ஏன் யோகியே பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை.

யோகி உத்தர பிரதேசம் வெளியே பிரச்சாரம் செய்யவில்லை. மோடியை ஆதரித்து பெரிதாக கூட்டம் கூட்டவில்லை. பாஜக வெல்ல வேண்டும் என்று அவர் பெரிதாக திட்டமிடவில்லை. முழுக்க முழுக்க மோடி மட்டுமே பிரச்சாரங்களை செய்தார். அங்கே யோகி பெரிதாக நிர்வாகிகளை கூட ஒருங்கிணைக்கவில்லை என்று கூறப்பட்டது.

தோல்வி முகம்: இப்படிப்பட்ட நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் மாபெரும் அரசியல் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கே பாஜகவை முந்திய இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி உள்ளது. பாஜக கூட்டணி 35 இடங்களுக்கு சென்று உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+