வாவ் சூப்பர்.. உத்தரப் பிரதேசத்தில் அடியோடு மாறும் மருத்துவத்துறை! யோகி ஆதித்யநாத் முன்முயற்சி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சுகாதார தரத்தை மேம்படுத்த 'டிஜிட்டல் டாக்டர்' திட்டத்தை செயல்படுத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு முயற்சி எடுத்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த 'டிஜிட்டல் டாக்டர்' திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.
டெலிமெடிசின் மற்றும் ஆன்-தி-ஸ்பாட் அடிப்படை நோயறிதல் திறன்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள நோயாளிகளின் நலன்களை பாதுகாக்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இது குறித்து x சோஷியல் மீடியா தளத்தில், "உத்தரபிரதேசத்தில் சுகாதார வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், குறிப்பாக கிராமப்புறங்களில், 'டிஜிட்டல் டாக்டர்' வசதியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான முன்மொழிவுகள் தனியார் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறை மற்றும் மாநில அரசு அதன் இறுதி கட்டமைப்பை தீர்மானிக்கும்" என்று உ.பி அரசு கூறியுள்ளது.
இதன்படி முதலில், புலந்த்ஷாஹர் மற்றும் லக்னோவில் உள்ள 20 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தில் மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் மற்றும் தீவிர நோய்களுக்கான நோயியல் பரிசோதனை வசதிகள் ஆகியவை இருக்கும். மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட மானியங்களும் வழங்கப்படும் என்று உ.பி மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications