லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியை நீங்கள் அப்படி திட்ட கூடாது.. தவறு.. கொதித்த பிரியங்கா காந்தி.. ஏன் தெரியுமா?

பிரதமர் மோடியை சிறுவர்கள் சிலர் தரக்குறைவாக பேசியதை கேட்டதும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களை கண்டித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

லக்னோ: பிரதமர் மோடியை சிறுவர்கள் சிலர் தரக்குறைவாக பேசியதை கேட்டதும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களை கண்டித்து இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் தற்போது லோக்சபா தேர்தலுக்காக உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் இன்று அமேதியில் பிரச்சாரம் செய்தார்.

Dont talk against Modi like that, Priyanka Advices Children- Video goes Viral

இந்த நிலையில் அமேதியில் கூட்டமாக நின்ற சிறுவர்கள், பிரியங்காவை பார்த்ததும் கோஷமிட்டார்கள். இதனால் பிரியங்கா தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களிடம் சென்று உரையாடினார். அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோஷமான 'சவுக்கிதார் சோர் ஹே' என்று சிறுவர்கள் கோஷமிட்டார்கள்.

உ.பியில் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் பிரியங்கா.. ஷாக்கிங் பிளான் இதுதான்! உ.பியில் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் பிரியங்கா.. ஷாக்கிங் பிளான் இதுதான்!

இதை பிரியங்கா காந்தி ரசித்தபடி கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அந்த சிறுவர்கள் உற்சாக மிகுதியில் மோடியை கொஞ்சம் தரக்குறைவாக பேச தொடங்கினார்கள். இதை கேட்டதும் அதிர்ச்சியில் பிரியங்கா காந்தி வாயை மூடிக்கொண்டார்.

பின் உடனடியாக அந்த சிறுவர்களிடம் நீங்கள் அப்படி பேச கூடாது. அது தவறு. நல்ல சிறுவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதையடுத்து சிறுவர்கள் எல்லோரும் ராகுல் காந்தி வாழ்க என்று கோஷமிட்டனர்.

இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பிரியங்காவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதே சமயம் பாஜகவினர் சிலர், பிரியங்கா அறிவுரை செய்யும் பகுதியை கட் செய்துவிட்டு, முதல் பாதியை மட்டும் வெளியிட்டு, பிரியங்காவை கிண்டல் செய்து வருகிறார்கள்.

English summary
Don't talk against Modi like that, Priyanka Gandhi Advices Children- Video goes Viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X