மதுபோதையில் தந்தையின் கொடூரம்... இரண்டு மாதங்களே ஆன குழந்தையை அடித்துக் கொன்ற குடிகாரன்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இரண்டு மாத குழந்தையைத் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவேந்தர். குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டையிடுவார்.

நேற்றும், தேவேந்தர் அதேபோல குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மனைவி ரேணு, அவருடன் சண்டை போட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதால் தேவேந்தர் அருகிலிருந்த கம்பை எடுத்து மனைவி ரேணுவைத் தாக்கத் தொடங்கியுள்ளார். ரேணுவின் மடியில் தனது இரண்டு மாத குழந்தை இருப்பதைக்கூட அறியாது அந்தக் கொடூரன் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
குடிகாரனின் இந்தக் கொடூர தாக்குதல் காரணமாக அந்த இரண்டு மாத பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
புதன்கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து இந்திய தண்டை சட்டம் 304இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது தலைமறைவாக உள்ள தேவேந்தரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications