லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 மனைவி இருந்தாலும் அனைவரையும் மதிக்கிறோம்.. ஆனால் இந்துக்கள்? ஓவைசி கட்சி தலைவர் பேச்சால் சலசலப்பு

Google Oneindia Tamil News

லக்னோ: எங்களுக்கு 3 மனைவிகள் இருந்தாலும் அனைவரையும் மதிக்கிறோம் என்றும் ஆனால் இந்துக்கள் அப்படியல்ல என்று உத்தர பிரதேசத்தில் ஓவைசி கட்சி தலைவர் ஷௌகத் அலி பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசதூதின் ஓவைசி தனது ஆக்ரோஷமான கருத்துக்களுக்காகவும் மத்திய பாஜகவை கடுமையாக விமர்சிப்பதாலும் நாடு முழுவதும் அறியப்பட்டவர்.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுடன் கருத்துக்களை முன்வைக்கும் ஓவைசி, அவ்வப்போது பிரதமர் மோடி பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார்.

‛‛ஆங்கிலேயர்களின் அடிமை’’.. ‛‛திப்பு’’ ரயில் பெயர் மாற்றத்தால் பாஜகவை நேரடியாக தாக்கி பேசிய ஓவைசி ‛‛ஆங்கிலேயர்களின் அடிமை’’.. ‛‛திப்பு’’ ரயில் பெயர் மாற்றத்தால் பாஜகவை நேரடியாக தாக்கி பேசிய ஓவைசி

ஒரு மனைவியை வைத்திருந்தால்

ஒரு மனைவியை வைத்திருந்தால்

ஆனால், மற்றொரு பக்கம் பாஜகவின் 'பி' டீமாக ஓவைசி செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தும் வருகின்றன. ஆனாலும் இதையெல்லாம் நிராகரிக்கும் ஓவைசி கடுமையாக மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், ஓவைசி கட்சியின் உத்தர பிரதேச தலைவரான ஷௌகத் அலி, இந்துக்கள் ஒரு மனைவியை வைத்திருந்தால் பல பெண்களை வைப்பாட்டியாக வைத்திருப்பதாக பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 3 பெண்களை வைப்பாட்டியாக..

3 பெண்களை வைப்பாட்டியாக..

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷௌகத் அலி கூறியதாவது:- நாங்கள் மூன்று திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். நாங்கள் இரண்டு திருமணம் செய்து கொண்டால் கூட சமூகத்தில் இரண்டு மனைவிகளுக்கு மதிப்பு கொடுக்கிறோம். ஆனால் நீங்கள் ( இந்துக்கள்) ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்கிறீர்கள். 3 பெண்களை வைப்பாட்டியாக வைத்துக்கொள்கிறீர்கள்.

 இந்துத்துவா முடிவு செய்ய முடியாது

இந்துத்துவா முடிவு செய்ய முடியாது

மனைவியையும் மதிப்பது இல்லை. வைப்பாட்டியாக உள்ள பெண்களையும் மதிப்பது இல்லை. ஆனால், நாங்கள் இரண்டு திருமணம் செய்தாலும் இருவரையும் மரியாதையாக வைத்துக்கொள்கிறோம். எங்களின் குழந்தைகளின் பெயரும் ரேஷன் கார்டில் இடம் பெறும்'' என்றார். ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பேசிய ஷௌகத் அலி, ''நாட்டில் யார் என்னை ஆடை அணிய வேண்டும் என்பதை இந்துத்துவா முடிவு செய்ய முடியாது.

பாஜக பலவீனம் அடையும் போது

பாஜக பலவீனம் அடையும் போது

அரசியல் அமைப்புதான் முடிவு செய்ய வேண்டும். இதுபோன்ற விவகாரங்களை எழுப்பி தேசத்தை உடைக்க பாஜக முயற்சிக்கிறது. மதராசாக்கள், கும்பல் தாக்குதல்கள், வக்ஃபு வாரியம் மற்றும் ஹிஜாப் என பல விஷயங்கள் எங்களுக்கு எதிராக நடக்கின்றன. ஏனென்றால் எங்களை டார்கெட் செய்வது எளிது என்பதால் இப்படி செய்கின்றனர். பாஜக பலவீனம் அடையும் போது முஸ்லீம்கள் பிரச்சினையை கையில் எடுக்கின்றனர்'' என்றார்.

English summary
Party leader Owaisi said in Uttar Pradesh that he respects all of them even though he has 3 wives, but Hindus are not like that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X