தரிசனத்துக்கு மறுப்பு.. காசி கோயில் ஊழியர்கள் கரார்! கடுப்பான பக்தர்கள் - கலவரமான கருவறை
லக்னோ: வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு வந்த பக்தர்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்திய அளவில் புகழ்பெற்ற கோயிலான காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை 2 பக்தர்கள் காசி கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்று இருக்கிறார்கள்.

தரிசனத்துக்கு மறுப்பு
அப்போது கோயில் ஊழியர்கள் கருவறையை மூடி ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏமாற்றமடைந்த அந்த 2 பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக கருவறையை திறக்குமாறு கோரி இருக்கின்றனர். இதற்கு கோயில் ஊழியர்கள் 4 பேர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இதனால் பக்தர்கள் இருவரும் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கருவறைக்குள் கைகலப்பு
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கருவறைக்குள் புகுந்தனர். அங்கு இருதரப்பினரும் ஒருவர் மீது மற்றொருவர் தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த மேலும் சில கோயில் ஊழியர்கள் தகராறில் ஈடுபட்ட 2 பக்தர்களை கருவறையில் இருந்து வெளியேற்றினர்.

போலீசில் புகார்
இது தொடர்பாக காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகத்துக்கு ஊழியர்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர். அதில் பக்தர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தும்போது போலீசார் உதவிக்கு வரவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளார்கள். அதே நேரம் அந்த 2 பக்தர்களுக்கு கோயில் ஊழியர்கள் 4 பேர் உட்பட 5 பேர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்து இருக்கின்றனர். சாமி தரிசனத்துக்கு தங்களை அனுமதிக்காததுடன், தங்களை கோயில் ஊழியர்கள் கடுமையாக தாக்கியதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சிசிடிவி காட்சி
இதற்கிடையே கோயில் கருவறைக்குள் இரு தரப்பினர் மோதிக்கொள்ளும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோயிலில் தரிசனம் செய்வது தொடர்பாக காவல்துறையினருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்து கோயில் ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் பிரச்சனை சரி செய்யப்பட்டது.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications