"நான் தான் ஓட்டுவேன்" வந்தே பாரத் ரயிலை இயக்க மோதல்.. சட்டை கிழிய சண்டை போட்ட லோகோ பைலட்கள்
லக்னோ: வந்தே பாரத் ரயிலை யார் இயக்குவது என்பதில் ஏற்பட்ட போட்டியில் லோகோ பைலட்கள் சட்டை கிழியும் அளவிற்கு சண்டை போட்டுக்கொண்ட காட்சி இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கங்காபூர் சிட்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த மோதலை பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர்.
வழக்கமாக ரயில்களில் ஏறுவதற்கு பயணிகளுக்கு இடையேதான் போட்டா போட்டி நடக்கும்.. அதிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் சீட் பிடிப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு ரயில்களில் ஏறுவார்கள். சில சமயங்களில் அடிதடி வரை சென்று பயணமே செய்ய முடியாத அளவுக்கு கூட சிலருக்கு அன்றைய நாள் மாறிவிடும்..

இதெல்லாம் அவ்வப்போது நடப்பதை பார்க்க முடியும். ஆனால், ரயிலை இயக்குவதற்கு லோகோ பைலட்கள் இடையே சண்டை நடந்த வினோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் எப்போது, எங்கு நடைபெற்றது என்ற விவரத்தை பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ராஜஸ்தானின் உதய்பூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலை இயக்குவது தொடர்பாக ஆக்ரா மற்றும் கோடா ரயில்வே டிவிஷன் ஊழியர்களுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கிய முதல் நாளிலேயே இரண்டு டிவிஷனை சேர்ந்த ஊழியர்களும் ரயிலை இயக்குவதற்காக மோதிக்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் மீண்டும் இரண்டு டிவிஷன்களில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு வந்தே பாரத் ரயிலுக்குள் ஏற முயன்றனர். இதில் கை கலைப்பு சூழலும் ஏற்பட்டது. சட்டைகளும் கிழிந்தன. வந்தே பாரத் ரயிலின் கார்டு ரூம் லாக் மற்றும் முன்பக்க கண்ணாடியும் சேதம் அடைந்தது.
ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில்வே போலீசார், சண்டையை விலக்கி விட முயன்றனர். இந்த பிரச்சினையை ரயில்வே வாரியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர்களாலும் தீர்வு ஏற்படுத்த முடியவில்லை. இதனால் ரயில்சேவை தாமதம் ஆனது. வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே லோகோ பைலட்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கங்காபூர் சிட்டி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த மோதலை பயணிகள் தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை அதிநவீன வசதிகள் கொண்டதாக உள்ளது. முழுவதும் ஏசி வசதி கொண்ட இந்த ரயில் அதிவேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த ரயில்களில் தானியங்கி கதவுகள், பயோ டாய்லட்கள், பெரிய ஜன்னல்கள், தானியங்கி தீ தடுப்பு கருவி என பல்வேறு நவீன அம்சங்கள் உள்ளன. நாடு முழுவதும் 54 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications