உ.பி.முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்.. பிரதமர் மோடி, அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்!
லக்னோ: உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89. நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த கல்யாண் சிங் முதலில் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பினர் சுய நினைவு இழந்ததாலும், உடல் உறுப்பு செயல் இழந்ததாலும் ஜூலை மாதம் 4-ம் தேதி லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

கல்யாண் சிங் மரணம்
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் இன்று இரவு கல்யாண் சிங் உயிரிழந்தார். கல்யாண் சிங் கடந்த 1991-92 மற்றும் 1997-99 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்துள்ளார். மேலும், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் கவர்னராகவும் இருந்துள்ளார். 1992-ம் ஆண்டு கல்யாண் சிங் முதல்வராக இருந்தபோதுதான் உத்தர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி இரங்கல்
கல்யாண் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ' இந்தியாவின் கலாச்சார மீளுருவாக்கத்திற்காக கல்யாண் சிங் செய்த பங்களிப்புகளுக்காக வரவிருக்கும் தலைமுறையினர் என்றென்றும் தலைமுறையினர் நன்றியுடன் இருப்பார்கள். அவர் இந்திய மதிப்புகளில் உறுதியாக வேரூன்றி இருந்தார் மற்றும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளில் பெருமை கொண்டார்' என்று கூறியுள்ளார்.

மூத்த சகோதரர்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இரங்கல் செய்தியில் ' ஒரு "மூத்த சகோதரர்" மற்றும் ஒரு "தோழரை" இழந்துவிட்டேன். கல்யாண் சிங் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஸ்ரீ ராம் ஜென்மபூமி இயக்கத்தில் அவரது முக்கிய பங்குக்காக இந்த நாடு எப்போதும் அவரை நினைவுகூரும். அவரது மரணம் இந்திய அரசியலுக்கு பெரும் இழப்பாகும், இது எனக்கு மிகவும் சோகமான தருணம்.

பாஜகவை வலிமைபடுத்தியவர்
ஜன சங்கத்தின் காலத்திலிருந்து கல்யாண் சிங் பா.ஜ.க.வை வலிமைப்படுத்தி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சென்றடைய கடுமையாக உழைத்தார்.இக்கட்டான நேரத்தில் கடவுள் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு பொறுமையையும் பலத்தையும் தரட்டும். ஓம் சாந்தி'' என்று ராஜ்நாத் இரங்களில் கூறியுள்ளார்.

பங்ககளிப்பு
''எங்கள் மூத்த தலைவர் மரியாதைக்குரிய கல்யாண் சிங் ஜி மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். கல்யாண் சிங் ஜி உத்தரப்பிரதேசத்தில் ஜனசங்கத்தையும் பாஜகவையும் உருவாக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பு செய்துள்ளார்'' என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications