Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.3,100 கடனுக்காக நிர்வாண ஊர்வலம்! உத்தரப் பிரதேசத்தில் பூண்டு வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ரூ.3,100 கடனை திருப்பி செலுத்த தாமதமானதால் பூண்டு வியாபாரி ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டர் 88ல் 35 வயது மதிக்கத்தக்க பூண்டு வியாபாரி ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கமிஷன் ஏஜென்ட்டிடம் ரூ.5,600ஐ கடனாக வாங்கியிருந்தார். இந்த கடனில் ரூ.2,500ஐ கமிஷன் ஏஜென்ட்டிடம் நேரில் சென்று திரும்ப கொடுத்திருக்கிறார். ஆனால் மீதமுள்ள பணம் எங்கே என்று கமிஷன் ஏஜென்ட் கேட்க, அடுத்த சில நாட்களில் தருவதாக பூண்டு வியாபாரி கூற, இதை ஏற்றுக்கொள்ளாத ஏஜென்ட் தகராறு செய்திருக்கிறார்.

Garlic Vendor paraded naked for loan of Rs 3,100 in UP

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் பெரியதாகியுள்ளது. இதனையடுத்து கமிஷன் ஏஜென்ட் மற்றும் அவரது உதவியாளர் சேர்ந்து பூண்டு வியாபாரியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலால் வியாபாரி நிலை குலைந்த நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கமிஷன் ஏஜென்ட்டும் அவரது உதவியாளரும் அவரை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.

மறுபுறம் பாதிக்கப்பட்ட பூண்டு வியாபாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "அவர்களிடம் நான் வாங்கிய கடன் ரூ.5,600. இதில் ரூ.2,500ஐ திருப்பி செலுத்த அவர்களது கடைக்கு சென்றேன். ஆனால் அவர்கள் இந்த பணத்தை வாங்கிக்கொண்டு மீதி பணத்தையும் உடனடியாக கொடுக்கும்படி கேட்டனர். அதை என்னால் உடனடியாக கொடுக்க முடியாது. இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கூறியிருந்தேன்.

இதனை அவர்கள் ஏற்கவில்லை. கமிஷன் ஏஜென்ட்டின் உதவியாளர்கள் இருவர் என்னுடைய கைகளை பிடித்துக்கொண்டனர். மூன்றாவது நபர் என் மீது சரமாரியாக தாக்குல் நடத்தினர். நான் நிலை தடுமாறி விழுந்தபோது எனது ஆடைகளை உருவி என்னை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றனர். என்னால் இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை இரண்டு பேரை கைது செய்துள்ளது.

நொய்டாவின் கூடுதல் டிஜிபி ராஜீவ் தீட்சித், இது குறித்து விளக்கமளித்துள்ளார். "சோஷியல் மீடியாவில் பூண்டு வியாபாரியின் நிர்வாண வீடியோ மற்றும் அவர் கொடுத்த புகாரின் பேரின் நாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். முக்கிய குற்றவாளியான கமிஷன் ஏஜென்ட் சுந்தர் சிங் மற்றும் அவரது உதவியாளர் பகந்தாஸ் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள், மேலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்கள் மீது ஐபிசி பிரிவு 323, 342, 357, 504, 506 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66இ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். ரூ.3,100 கடனை திருப்பி செலுத்தாததால் பூண்டு வியாபாரி ஒருவர் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+