பரபரக்கும் உபி.. ஞானவாபி மசூதியில் தொடரும் தொல்லியல் ஆய்வு.. தடை கோரிய வழக்கு இன்று மீண்டும் விசாரணை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு இன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வருகிறது. இதில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. இந்த மசூதி அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 Gyanvapi Mosque Case Allahabad high court to hear petition challening ASI survey

இருப்பினும், இங்கு விஷேஷ்வர் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் இந்த ஞானவாபி மசூதி கட்டியதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் 4 பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதன் அடிப்பையில் அங்கு தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அங்கே தொல்லியல் துறை ஆய்வு நடைபெற்றது.

இதற்கிடையே ஞானவாபி மசூதி உள்ள இடத்தில் இருப்பதாக நம்பப்படும் விஷேஷ்வர் கோயிலை மீட்டெடுக்கக் கோரி வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அதேபோல ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி அளித்து 2021இல் வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மற்றொரு மனுவும் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மனுக்களும் ஒன்றாக இணைக்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி பிரகாஷ் பாடியாவின் ஒற்றை பெஞ்ச் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரித்து வந்தது. இதற்கிடையே கடந்த மாதம் இறுதியில் இந்த வழக்கு திடீரென உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ​​வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் (ஏஐஎம்) இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தின் மற்றொரு தனி நீதிபதி விசாரித்ததாகவும் அவர் தீர்ப்பு வழக்கு இருந்த நிலையில், இப்போது மீண்டும் தலைமை நீதிபதி விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும் முறையிடப்பட்டது.

இருப்பினும், விசாரணை முடிந்த பிறகும் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால் அதை தலைமை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்ற விதிகளின்படி அதிகாரம் இருப்பதாக தலைமை நீதிபதி கூறினார். மேலும், அந்த ஒற்றை நீதிபதி பெஞ்ச் கடந்த 2021 மார்ச் 15 முதல் பல முறை தீர்ப்பை ஒத்திவைத்த போதிலும், தீர்ப்பு வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று அடுத்த விசாரணையை ஒத்தி வைத்தார். அதன்படி அந்த வழக்கு இன்று செப்டம்பர் 12இல் விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக தொல்லியல் துறை ஆய்வு குறித்த அறிக்கையை சமர்பிக்க தொல்லியல் துறைக்கு கூடுதலாக 4 வாரங்கள் அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+