பெரிய சத்தம் கேட்டது.. விபத்துக்கு காரணம் என்ன? ரயிலின் லோகோ பைலட் வெளியிட்ட திடுக் தகவல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்துக்கு முன்பாக பயங்கர சத்தம் கேட்டதாக லோகோ பைலட் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உட்பட மொத்தம் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. தடம் புரண்ட இந்த 12 பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய தகவல்களின்படி இந்த ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. 4 ஏசி பெட்டிகள் உள்பட மொத்தம் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது. இதில் சிக்கிய பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். இதுவரை ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சண்டிகர்- திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 15904) நேற்று இரவு 11.35 மணியளவில் சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகருக்கு புறப்பட்டது. இந்த ரயில் இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் மோதிகஞ்ச் ஜிலாகி அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது திடீரென எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 முதல் 12 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் மற்றும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேச கோண்டா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சகம் நிவாரணம் அறிவித்துள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, ரயில் விபத்தில் சிக்கும் முன்பாக பலத்த சத்தம் கேட்டதாக விபத்துக்குள்ளான ரயிலின் லோகோ பைலட் கூறியுள்ளார். இதனால், தண்டவாளத்தில் ஏதேனும் பொருட்கள் கிடந்ததால் அதில் மோதி ரயில் தடம் புரண்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சதி செயல் எதுவும் காரணமா? எனவும் ரயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications