"இந்துத்துவா" என்பதே போலி வரலாற்று தொழிற்சாலைதானே.. யோகியின் பேச்சுக்கு ஓவைசி பதிலடி..!
யோகியின் பேச்சுக்கு ஓவைசி பதிலடி தந்துள்ளார்
லக்னோ: சந்திரகுப்தாவுக்கு எதிரான போரில் சிக்கந்தர் தோல்வியடைந்தது குறித்து உபி முதல்வர் யோகியின் கருத்துக்கு அகில இந்திய மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லிமின் தலைவர் ஒவைசி ட்விட்டரில் பதிலடி தந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஏஐஎம்ஐஎம் எனப்படும் அகில இந்திய இத்தாஹாதுல் முஸ்லிமின் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது.
இதற்காக அக்கட்சியின் தலைவர் ஒவைஸி, அயோத்தியில் பிரச்சாரத்தை தொடங்கி உபியின் கிழக்குப் பகுதி முழுவதும் ஒரு வாரம் பிரச்சாரம் செய்து முடித்தார்.

தேர்தல்
இப்போதும் அது தீவிரமாகி வருகிறது.. உத்தரபிரதேசத்தில் பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம் என்றம், அதற்காக உபி தேர்தலில் போட்டியிடுகிறோம், இந்த தேர்தலில் போட்டியிட்டு கண்டிப்பா வெற்றி பெறுவோம். உத்தரபிரதேச முஸ்லிம்களின் வெற்றிக்கு எங்கள் கட்சி உறுதுணையாக இருக்கும், உபியில் புதிய அத்தியாயம் தொடங்கும் என்றும் செல்லும் இடமெல்லாம் விடாமல் சொல்லி வருகிறார்.. மேலும் முதல்வர் யோகியின் பேச்சுக்கள், பிரச்சாரங்கள் போன்றவைகளை விமர்சித்து அவைகளுக்கு காட்டமாக பதிலளித்து வருகிறார்.

பதிலடி
அந்த வகையில், லக்னோவில் நடந்த சமூக பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர் யோகி பேசிய பேச்சுக்கும் ஓவைசி பதிலளத்துள்ளார்.. ஆதித்யநாத் பேசும்போது,"வரலாறு எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது பாருங்கள்.. அசோகரையோ அல்லது சந்திரகுப்த மௌரியரையோ "தி கிரேட்" என்று வரலாறு விவரிக்கவில்லை.. சந்திரகுப்தனால் தோற்கடிக்கப்பட்டவர் அலெக்சாண்டர் தான் அப்படி அழைக்கப்பட்டார்..

ஏமாற்றம்
நாட்டில் எவ்வளவு பெரிய ஏமாற்றம் இது.. ஆனால் வரலாற்றாசிரியர்கள் இதைப் பற்றி வாயே திறக்கவில்லை.. உண்மையான இந்தியர்களுக்கு முன்னுக்கு வந்தால், சமூகம் மறுபடியும் நிற்கும்... சமுதாயம் நிற்கும்போது நாடு நிலைத்து நிற்கும்... இன்று பிரதமர் மோடி அத்தகைய நாட்டை கட்டமைத்து வருகிறார்... இப்போது பிரிவினை பிரச்சினையை எழுப்புபவர்கள் தலிபான் ஆதரவாளர்கள்" என்று கூறியிருந்தார்.

ட்வீட்
இதற்குதான் ஓவைசி ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.. "இந்துத்துவா என்பது தவறான வரலாற்றின் தொழிற்சாலை.. யோகியின் கூற்று பொய்யானது.. சந்திரகுப்தாவுக்கும் சிக்கந்தருக்கும் இடையே போர் எதுவுமே நடக்கவில்லை.. நல்ல கல்வி முறையே இங்கு தேவை என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான் இது.. நல்ல பள்ளிகள் இல்லாத காரணத்தினால்தான், தங்கள் வசதிக்கேற்ப இப்படியெல்லாம் வரலாறு உருவாக்குகிறார்கள் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications