"அந்தரங்கம்"..ஹோட்டலில் ரூம் போட்ட இளம்தம்பதி.. அந்த "மூன்றாவது கண்".. ஒரே அலறல்.. 4 பேராமே
ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருந்தபோது கேமராவில் படம் பிடித்துள்ளனர் 4 பேர்
லக்னோ: ஹோட்டல் ரூமில் இளம்தம்பதியினர் ரூம் புக் செய்து தங்கியிருந்தனர்.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மாதம் ஒரு அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்தது.. இந்தூர் காண்ட்வா மாவட்டத்தில் மிக பிரபலமான ஹோட்டல் அது..
இங்கு போபாலை சேர்ந்த 2 பெண்கள் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.. ஒரு வேலை விஷயத்துக்காக இங்கே இவர்கள் வந்திருக்கிறார்கள்.. ஒரு பெண்ணுக்கு 35 வயது, இன்னொரு பெண்ணுக்கு 25 வயது..

கசமுசா
பணி நிமித்தம் காரணமாக, திங்கட்கிழமை 2 பேருக்கும் அப்பாயிண்ட்மென்ட் தந்திருந்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். கட்டிலில் நள்ளிரவு நேரம்.. 2 பெண்களுமே தூங்கிவிட்டனர்.. இதில் ஒரு பெண் திடீரென கண்விழித்தபோது, யாரோ ஒருவர் அவர்களுடன் கட்டிலில் படுத்து கொண்டிருப்பதை பார்த்து பதறியுள்ளார்.. பிறகு இன்னொரு பெண்ணும் இதை கண்டு அலறி சத்தமிட்டார்.. அந்த நபர், கட்டிலில் இந்த 2 பெண்களுக்கு நடுவில் வந்து படுத்துக் கொண்டிருந்தார்..

மிட்நைட்
இந்த 2 பெண்களும் அலறி கதறியதில், அந்த நபர் ரூம் கதவை பூட்டிவிட்டு வெளியே ஓடிவிட்டார்... அவர் அந்த ஓட்டல் ஊழியர்தான்.. 22 வயதாகிறது.. வெயிட்டராக இருக்கிறாராம்.. நள்ளிரவு நேரம்வரை காத்திருந்தவர், அந்த கண்ணாடி ஜன்னல் வழியாக, அவர்களது ரூமுக்குள் சத்தமில்லாமல் நுழைந்திருக்கிறார்.. அவர்களுடன் சேர்ந்து இவரும் கட்டிலின்மீது ஏறி படுத்து, பாலியல்ரீதியில் அத்துமீறுவதற்கு முயன்றுள்ளார்.. அதற்குள் பெண்கள் கண்விழித்துவிடவும், தப்பி ஓடிவிட்டார்..

தாம்பத்யம்
அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தாலும், இதுபோன்ற முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்றுகூட ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நடந்துள்ளது. ஓயோ நிறுவனத்தின் ஹோட்டல் ரூமை, ஒரு இளம் தம்பதியினர் புக் செய்து தங்கியுள்ளனர்... அப்போது, ஒரு கும்பல், தம்பதி தங்கியிருந்தபோது, அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை வீடியோவாக ரகசிய கேமரா மூலம் எடுத்துவிட்டனர்..

அந்தரங்கம்
அந்த வீடியோவை காட்டி, பணம் கேட்டு மிரட்டியதுடன், வீடியோவை பொதுவெளியில் வெளியிட்டு விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ந்து போனார்கள் இளம்தம்பதியினர்.. வீடியோவை வெளியிடுவோம் என்ற மிரட்டலை கேட்டும், உடனடியாக இது தொடர்பாக போலீஸில் புகார் தந்தனர்.. இறுதியில் 4 பேர் சிக்கினார்கள்.. அப்போதுதான் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.. இப்படி தம்பதியினரின் அந்தரங்கத்தை வீடியோ எடுப்பதற்காகவே ஒரு கும்பல் செயல்படுகிறதாம்..

ஹோட்டல் ரூம்
ஹோட்டல் அறையை புக் செய்வது போல வருவார்களாம்.. அங்கேயே சிறிது நேரம் காத்திருந்து, நோட்டமிடுவார்களாம்.. இளம்தம்பதிகள், அல்லது புதுமண தம்பதிகள், கள்ளக்காதலர்கள் ரூம் எடுத்து தங்கினால், அவர்களுக்கு பக்கத்திலேயே ரூம் போட்டு கொள்வார்களாம்.. பிறகு ரகசிய கேமராவை செட் செய்து வைத்துவிடுவார்கள்... ஆனால், அந்த ரூமில் தங்க மாட்டார்களாம்.. உடனே ரூமை காலி செய்து கிளம்பி சென்றுவிடுவார்கள்.. கேமரா மட்டும் ஆன் செய்யப்பட்டிருக்கும்..

ரகசிய ரூம்
சில நாட்கள் கழித்து மறுபடியும் அதே ரூமுக்குள் வருவார்கள்.. ரகசியமாக வைக்கப்பட்ட கேமராவை எடுத்து வைத்துக் கொண்டு, அதில் பதிவான வீடியோக்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் கேட்பதையே வழக்கமாக வைத்துள்ளனர்.. மானத்துக்கு பயந்து போன தம்பதிகளும், இவர்கள் கேட்ட பணம், அல்லது நகைகளை கழட்டி தந்துவந்துள்ளனர்.. இந்த தம்பதி மட்டும்தான் துணிந்து போலீசுக்கு சென்றுள்ளனர்..

தாம்பத்யம்
விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார் மற்றும் அனுராக் குமார் சிங் ஆகிய 4 பேரும் இப்போது கைதாகி ஜெயிலில் உள்ளனர்.. 11 லேப்டாப்கள், 21 செல்போன்கள், 22 ஏடிஎம் கார்டுகள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.. இவர்கள் சட்டவிரோத கால் சென்டர்களையும் நடத்திவந்துள்ளனர்.. இதைதவிர, போலியான சிம் கார்டுகளை தயாரித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.. இவர்களுடன் மேலும் பல புள்ளிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்பதால், விசாரணை தீவிரமாகிறது..!!!
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications