"ஆபாச" சைக்கோ.. உச்சிக்கு ஏறிய காமம்.. அலறிய "லேடீஸ் ஹாஸ்டல்".. அதிலும் பாத்ரூமில்.. என்ன நடந்தது?
லேடீஸ் ஹாஸ்டல் பாத்ரூமில் கேமராவை பொருத்தி வைத்த நபர் கைதாகி உள்ளார்
லக்னோ: ஏராளமான இளம்பெண்கள் அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் உறைந்து போயுள்ளனர்.. ஏற்கனவே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி கொண்டிருக்கும் உத்தரபிரதேசத்தில், மேலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசம், பிரயாக்ராஜ் நகரில் கர்னல் கஞ்ச் என்ற ஒரு பகுதி இருக்கிறது.. இங்கு ஒரு லேடீஸ் ஹாஸ்டல் பல வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது.
ஆஷிஷ் கரே என்பவர் இந்த ஹாஸ்டலை நடத்தி வருகிறார்.. இவரது அப்பா ஒரு டாக்டர்.. அந்த ஏரியாவிலேயே மிகவும் ஃபேமஸ் ஆன டாக்டர்..

டாக்டர் மகன்
இவரது மகன் ஹாஸ்டல் நடத்துகிறார் என்பதால், பெரும்பாலான மக்கள், அதீத நம்பிக்கையுடன், கல்லூரி மாணவிகளான தங்கள் மகள்களை இந்த ஹாஸ்டலில் சேர்க்க முன்வந்தனர்... அதேபோல, அந்த பகுதி இளம்பெண்களும், தாங்களாகவே மிகுந்த நம்பிக்கையுடன், இந்த ஹாஸ்டலில் தங்கினர்.. மேலும், தங்களுக்கு தெரிந்த மற்றும் நெருக்கமான தோழிகளுக்கும் இந்த ஹாஸ்டலை, மாணவிகளே சிபாரிசு செய்து வந்துள்ளனர்.. இதனால், ஏராளமான பெண்கள் இங்கு படையெடுத்து வர ஆரம்பித்துவிட்டனர்.

ஸ்பெஷல் சலுகை
ஹாஸ்டல் ஓனர் ஆஷிஷ், இளம்பெண்களுக்கு குறைந்த வாடகைக்குக்குதான் ஹாஸ்டலை நடத்தி வந்துள்ளார்..எந்நேரமும் இளம்பெண்கள் இங்கு நிறைந்து காணப்படுவார்களாம். ஆனால், எல்லாருக்குமே ஒரே மாதிரியான கட்டணங்கள் கிடையாது.. அழகான பெண்கள் என்றால் அவர்களுக்கு ஸ்பெஷல் சலுகை உண்டு.. அவர்களுக்கு ஸ்பெஷல் ரூம்கள் ஒதுக்கப்படும்.. இந்நிலையில், ஒருநாள், இளம்பெண் ஒருவர் பாத்ரூமுக்குள் குளிக்க சென்றார்.. அப்போது ஷவரில் இருந்து தண்ணீர் சரியாக வரவில்லை.

ரிப்பேர்
இது குறித்து நான்கைந்து நாட்களாக புகார் சொல்லியும், யாரும் அதை சரி செய்யவில்லை.. ஒவ்வொரு நாளும் குளிக்க சென்றால், அந்த ஷவரில் தண்ணீர் வராமல் இருந்துள்ளது.. ஆனால், ஷவர் மூடி மட்டும் வேறு பக்கம் திருப்பப்பட்டிருக்கும்.. இதனால், தினமும் ஷவரை ரிப்பேர் செய்யும் வேலை நடக்கிறது போலும் என்று அந்த பெண் நினைத்து விட்டார்.. அதனால், அன்றைய தினம் குளிக்கும்போது, அந்த ஷவரின் மூடியை, தாமே ஒருமுறை சரி செய்து பார்க்கலாம் என்று முயற்சித்துள்ளார்..

ஷவரில் கேமரா
அதனால், அந்த மேல் மூடியை கழற்றி சரி செய்ய முயன்றபோதுதான், அதற்குள் ஒரு கேமரா இருப்பதை கண்டு அதிர்ந்து போனார்.. அத்துடன் ஒரு ஒயரும் இணைக்கப்பட்டிருந்தது.. இதையெல்லாம் பயந்துபோன அந்த இளம்பெண், போலீசுக்கு ஓடினார்.. நடந்த சம்பவம் குறித்து புகார் செய்யவும், அவர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.. ஆஷிஷையும் கைது செய்தனர்.. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணயில், பகீர் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. இப்போதும் சில தகவல்கள் போலீஸ் தரப்பில் வெளியாகி உள்ளன. ஹாஸ்டல் பாத்ரூம்களில் ஏகப்பட்ட கேமராக்களை பொருத்தி வைத்துள்ளார் ஆஷிஷ்..

ஃபைல்கள்
அவைகள் எல்லாம் அழகான பெண்கள் தங்கியுள்ள பாத்ரூமில் பொருத்தி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.. குளியலறையில் பதித்த கேமராக்களில் பதிந்த காட்சிகளை வைத்து, ஏராளமான வீடியோக்களை தயார் செய்துள்ளார்.. அவைகளை லேப்டாப்களில், ஹார்டுடிஸ்க்குகளிலும் சேமித்து வைத்துள்ளார்.. இந்த வீடியோக்களை தினமும் இரவு நேரங்களில் பார்த்து பார்த்து ரசிப்பாராம் ஆஷிஷ்.. ஒவ்வொரு பெண்களுக்கும் தனித்தனி ஃபைல்களை போட்டு வைத்துள்ளார்.. அந்த வீடியோக்களுக்கு கீழே ஸ்பெஷலான வாசகம் ஒன்றை ஒரே மாதிரியாக எழுதி வைத்துள்ளார்.

அப்பாவி பெண்கள்
"அப்பாவி பெண் என்றால் எனக்கு பிடிக்கும்.. அதனால், உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதனால்தான், இப்படி வீடியோ பதிவு செய்திருக்கிறேன்.. என் ஆசைக்கு இணங்காவிட்டால், வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிடுவேன்" சம்பந்தப்பட்ட பெண்களிடம் காட்டி மிரட்டி வந்துள்ளார்..இதனால், பல பெண்களை இப்படி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.. அதுமட்டுமல்லாமல், வீடியோக்களை விற்பனைக்கும் விற்று சம்பாதித்து வந்துள்ளார்..

ஹார்டுடிஸ்க்குகள்
இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போலீசார் ஆஷிஷை கைது செய்துள்ளனர்.. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.. ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவிகள் அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு சென்னை ஆதம்பாக்கத்தில் இப்படித்தான் சஞ்சீவ் என்பவர் சிக்கினார்..

சஞ்சீவ் - ஹேங்கர்
வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சென்னைக்கு வரும் பெண்கள், இவரது ஹாஸ்டலில் நம்பி தங்கியிருக்கும்போது, இப்படித்தான் வேலையை காட்டினார்.. ஆனால், அவர் பாத்ரூம் என்றில்லாமல், ஒவ்வொரு ரூமிலும் கேமராவை வைத்திருந்தார்.. அடிக்கடி ரூம்களை சீரமைக்கணும் என்று சொல்லி, ஏதாவது வேலைகள் அங்கு நடந்து கொண்டே இருந்திருக்கிறது.. அதனால்தான் அங்கு அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு சந்தேகம் அதிகமாக எழுந்தது.. அதனால், அந்த பெண்களே, ஒருவேளை எங்காவது கேமரா வைக்கப்பட்டிருக்கிறதோ என்பது குறித்து ஆராய தொடங்கினர்...

ஹேங்கர்கள்
அப்போது, தங்களது செல்போன் ஆப்பில், ஹிட்டன் கேமரா டிடக்டர் மூலம், அந்த ஹாஸ்டலில் ரகசிய கேமராக்கள் இருப்பதை அவர்களே கண்டுபிடித்தனர்.. அதாவது பாத்ரூம், பெட்ரூம், துணி மாட்டும் கைப்பிடி (ஹேங்கர்) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்களுக்கு தெரியாத சிறிய அளவிலான ரகசிய கேமராக்களை சஞ்சீவ் வைத்திருந்தது தெரியவந்தது... இவரை கைது செய்தார்கள்.. இந்த கேஸ் பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை.. இப்போது உபியில் ஒருவர் சிக்கி உள்ளது, தாய்மார்களின் வயிற்றில் நெருப்பை அள்ளி போட்டு வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications