ரொம்ப பெருமையா இருக்கு! யோகி ஆதித்யநாத் குறித்து தாய் பெருமிதம்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக இன்று மாலை யோகி ஆதித்யநாத் 2வது முறையாக பதவியேற்க உள்ளார். இதுகுறித்து அவரது தாய் சாவித்ரி தேவி, ‛‛ரொம்ப பெருமையாக உள்ளது. அவனது சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் எப்போதாவது அவனிடம் பேசுவோம். ஆனால் அடிக்கடி டிவியில் பார்க்கிறோம்'' என தெரிவித்தார்.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று மாலை பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பாஜக முன்னணி தலைவர்களும், பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

உத்தரகாண்டில் குடும்பம்
யோகி ஆதித்யநாத்தின் குடும்பத்தினர் அவரது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் பவ்ரி கர்வால் அருகே பஞ்சூர் கிராமத்தில் வசிக்கின்றனர். அங்கு எளிய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் யோகி ஆதித்யநாத் குறித்து அவரது தாய், சகோதர, சகோதரிகள் பெருமையாக கூறியுள்ளனர். அதன் விபரம் வருமாறு:

தாய் பெருமிதம்
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் குறித்து அவரது தாய் சாவித்ரி தேவி பெருமையாக கூறியுள்ளார். இதுபற்றி இன்று அவர் கூறுகையில், ‛‛உத்தரபிரதேசத்தின் முதல்வராக எனது மகன் 2வது முறையாக பதவியேற்க உள்ளார். பெருமையாக உள்ளது. அவரது சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் எப்போதாவது அவனிடம் பேசுவோம். ஆனால் அடிக்கடி டிவியில் பார்க்கிறோம். மீண்டும் உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்றதால் ஏராளமானவர்கள் வீட்டுக்கு வந்து எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்து செல்கின்றனர்'' என்றார்.

சகோதரர், சகோதரி,
யோகி ஆதித்யாத் குறித்து அவரது சகோதரர் ஒருவர் கூறுகையில், ‛‛உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றபோது எனது சகோதரரை (யோகி ஆதித்யநாத்) பார்த்தேன். நான் மருத்துவமனையில் இருந்து வந்து பார்த்தேன். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை விழா போல் கொண்டாடுகின்றனர். இது பெருமையாக உள்ளது'' என்றார். யோகி ஆதித்யநாத்தின் சகோதரி சசிசிங் கூறும்போது, ‛‛யோகி ஆதித்யநாத்தை டிவியில் பார்த்து வருகிறேன். முதல்வராக பதவியேற்ற பிறகு வீட்டுக்கு வந்து தாயிடம் ஆசீர்வாதம் வாங்குவார் என நம்புகிறேன்'' என்றார்.

உருக்கமான கோரிக்கை
முன்னதாக நேற்று சசிசிங், யோகி ஆதித்யநாத்துக்கு உருக்கமான கோரிக்கை வைத்திருந்தார். அதாவது, வயதான அம்மாவை வந்து பார்த்து செல்லும்படியும், அவரது ஆசீர்வாதத்துடன் பதவியேற்றுக்கொள்ளும்படியும் கூறியிருந்தார். மேலும் வயதானாலும் யோகி ஆதித்யநாத் நினைப்பில் தாய் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்ப விபரம்
யோகி ஆதித்யநாத்தின் தந்தை பெயர் ஆனந்த் சிங் பிஷ்ட். வனக்காவலர். தாய் பெயர் சாவித்ரி தேவி. இவர்களுக்கு 1972 ஜூன் 5ல் யோகி ஆதித்யநாத் 2வது குழந்தையாக பிறந்தார். யோகி ஆதித்யநாத்துக்கு 4 சகோதரர்கள், 3 சகோதரிகள் உள்ளனர். இவரது இயற்பெயர் அஜய் சிங் பிஷ்ட் என்பதாகும். யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்ட் கொரோனா முதல் அலையின்போது இறந்தது குறிப்பபிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications