6 ஆண்டில் 30,000 பேர் இணைப்பு.. போலீஸ் துறையில் அசத்தும் பெண்கள்.. மாஸ் காட்டும் உத்தர பிரதேசம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 2017 ல் 10 ஆயிரம் பெண் போலீஸ் இருந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 30 ஆயிரம் பெண் போலீசார் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வராகி உள்ளார். மாநில மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார்.

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வருகிறார். மேலும் பெண்களின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் கடந்த 7 ஆண்டுகளில் பெண் போலீசாரின் எண்ணிக்கை என்பது 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. இதனை யோகி ஆதித்யநாத் பெருமையாக கூறியுள்ளார். சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பெண்களுக்கான மேம்பாடு தொடர்பான பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
உத்தர பிரதேச மாநில காவல் துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் பெண் போலீஸ் எண்ணிக்கை என்பது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 3 மடங்கு வரை போலீசாக பணிக்கு சேரும் பெண்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது.
2017 ம் ஆண்டில் பெண் போலீஸ் எண்ணிக்கை என்பது 10 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் நாடாளுமன்றம், சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளது. இது அரசியலில் அதிக பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கும்
மத்தியிலும், மாநிலத்திலும் சரி பாஜகவின் கொள்கை என்பது ஒன்று தான். அது என்னவென்றால் பெண்களுக்கு அதிகாரங்கள் வழங்குவதாகும். இதுதவிர வரும் காலத்திலும் இரட்டை என்ஜின் பாஜக அரசு உத்தர பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளது.'' என்றார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications