கணவன் வேண்டாம்.. ஓடிப்போன மனைவியை தேடிப்பிடித்து காதலனுடன் திருமணம் செய்து வைத்த நபர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: திருமணத்துக்கு பிறகு கணவன் வேண்டாம் என்று காதலனுடன் பெண் ஒருவர் எஸ்கேப் ஆனார். இதுபற்றி அறிந்த கணவர் தனது மனைவி மற்றும் அவரது காதலனை கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்து சேர்ந்து வாழ அனுப்பி வைத்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பிஆர்டி ஜவான் ஆக பணியாற்றி வருகிறார். அதாவது போலீசாருக்கு உதவியாக போக்குவரத்து சரிசெய்தல், பொது நிகழ்ச்சிகளில் கூட்டங்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை ரவி மேற்கொண்டு வருகிறார்.

marriage uttar pradesh

இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. அவரது மனைவி பெயர் சந்திரிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்கள் 2 பேருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இன்றி வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென்று சந்திரிகா வீட்டில் இருந்து மாயமானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரவி தனது மனைவி சந்திரிகாவை ஆங்காங்கே தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் சந்திரிகா கிடைக்கவில்லை. இதுதொடர்பாக ரவி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரிகாவை தேட தொடங்கினர். அப்போது ஹர்டாய் என்ற இடத்தில் சந்திரிகா தனது காதலனுடன் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் சந்திரிகாவையும், அவரது காதலனையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது சந்திரிகா, ''எனக்கு என்னுடைய கணவன் ரவி வேண்டாம். காதலனுடன் என்னை வாழ விடுங்கள். நான் விருப்பப்பட்டு தான் காதலனுடன் ஓடி வந்து தனியாக வசித்து வருகிறேன். நானும், எனது காதலனும் ஒரே பள்ளியில் படித்தோம். அப்போது இருந்தே நாங்கள் காதலிக்க தொடங்கினோம்.

திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணத்துக்கு பிறகும் என்னால், காதலனை மறக்க முடியவில்லை. இதனால் கணவரை விட்டு காதலனுடன் ஓடிவந்துவிட்டேன். எங்களை சேர்ந்து வாழ அனுமதியுங்கள்'' என்று கண்ணீர் வடித்தார்.

இதை கேட்ட ரவி தனது மனைவியை பிரிய முடிவு செய்தார். அவரது விருப்பப்படியே காதலனுடன் சேர்ந்து வாழ அனுமதித்தார். இதையடுத்து சந்திரிகா மற்றும் அவரது காதலன் ஆகியோர் அங்குள்ள கோவிலில் மாலை மாற்றி இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+