Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதவிடாய் காரணமாக.. மிஸ்ஸான நவராத்திரி பூஜை.. மூடநம்பிக்கையால் பெண் எடுத்த விபரீத முடிவு.. சோகம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: 9 நாள் நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே தான் மாதவிடாய் காரணமாக நவராத்திரி பூஜையில் பங்கேற்க முடியவில்லையே என்ற வருத்தத்ததில் மூடநம்பிக்கையால் 2 பெண் குழந்தைகளின் தாய் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டை விட வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகையை மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகை என்பது மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பண்டிகை என்பது கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. வரும் 7 ம் தேதி வரை நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தற்போது வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டி உள்ளது.

in-uttar-pradesh-woman-commits-suicide-after-unable-to-observe-navratri-due-to-her-periods

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்திலும் ஏராளமானவர்கள் நவராத்திரி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் முகேஷ் சோனி. திருமணம் ஆனவர். இவரது மனைவி பெயர் பிரியன்ஷா சோனி (வயது 36). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 3 வயது ஆகிறது. பெயர் ஜான்வி. 2வது மகளுக்கு 2 வயது ஆகிறது. பெயர் மான்வி.

ஒவ்வொரு ஆண்டும் பிரியன்ஷா சோனி தனது வீட்டில் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நவராத்திரி பண்டிகை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை முகேஷ் சோனி மேற்கொண்டார். வீட்டில் பழங்கள், இனிப்புகள், பூக்கள் வாங்கி முகேஷ் சோனி காளி பூஜைக்கு தயாரானார்.

நவராத்திரியின் முதல் நாளான கடந்த மாதம் 30ம் தேதி முகேஷ் சோனியின் மனைவி பிரியன்ஷா சோனிக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பூஜையில் பங்கேற்கவில்லை. மாதவிடாய் காலத்தில் வழிபாடு கூடாது என்று பிரியன்ஷா சோனி நம்பினார். . இதனால் பிரியன்ஷா சோனி பங்கேற்கவில்லை. கடந்த ஓராண்டு காலமாக பூஜைக்கு அவர் காத்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் மாதவிடாய் காரணமாக பங்கேற்க முடியவில்லையே என்று அவர் மனவருத்தம் அடைந்தார்.

இதனால் விரக்தியடைந்த பிரியன்ஷா சோனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி பிரியன்ஷா சோனியின் கணவர் முகேஷ் சோனி கூறுகையில்,‛‛எனது மனைவி பிரியன்ஷா சோனி நவராத்திரி பூஜைக்கு தயாராகி வந்தார். ஆனால் 9 நாள் கொண்டாட்டத்துக்கு முந்தைய நாள் அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டது.

இதனால் அவர் மன வருத்தம் அடைந்தார். மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று தான். அப்படி இருக்கும்போது ஒன்றும் கவலைப்பட தேவையில்லை. பூஜையை நான் செய்கிறேன் என்று கூறினேன். ஆனால் பூஜை செய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தில் மனைவி இருந்தார். நான் ஆறுதல் கூறினேன். ஆனாலும் அவள் கேட்காமல் தொடர்ந்து கண்கலங்கினார். நான் வீட்டை விட்டு வெளியே சென்றபோது அவள் விஷம் குடித்தாள்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். உடல்நலம் தேறினாள். இதையடுத்து அவளது பெற்றோர் வீட்டில் இருந்தால் கவலையின்றி இருப்பார் என்று நினைத்தேன். இதனால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய்விட்டேன். ஆனால் அங்கு வைத்து திடீரென்று உடல்நல பிரச்சனையை எதிர்கொண்டார். திடீரென்று முதுகு வலிப்பதாக கூறினார்.

மாதவிடாய் காரணமாக முதுகு வலிக்கலாம் என்று நினைத்தேன். வலி அதிகமாக இருப்பதாக கூறியதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கு நலமானார். ஆனால் மறுநாள் மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்போர்ட்டில் இருந்தார். என்னிடம் ஜூஸ் வாங்கி வரும்படி கூறினார். நான் ஜூஸ் வாங்கி வரும்போது அவள் இறந்துவிட்டாள்'' என்று கண்கலங்கியபடி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+