Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலில் தோற்றாலும் து.முதல்வர்..யார் இந்த கேசவ் பிரசாத் மவுரியா? பேப்பர் பாய் டூ துணை முதல்வர் வரை

Subscribe to Oneindia Tamil

லக்னோ : சட்டமன்ற தேர்தலில் சுமார் 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்த போதிலும், உத்தரபிரதேச மாநில துணை முதல்வராக கேசவ் பிரசாத் மவுரியா 2வது முறையாக பதவியேற்றுள்ளார். குடும்ப சுழல் காரணமாக பேப்பர் பாயாக வாழ்க்கையை தொடங்கிய அவர் துணை முதல்வர் ஆனது வரையிலான சுவாரசிய பின்னணி குறித்து பார்க்கலாம்..

403 தொகுதிகளை கொண்ட உபியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் முதல்வராக யோகி ஆதித்யநாத் 2வது முறையாக இன்று லக்னோவில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

மேலும் உத்தரபிரதேச மாநில துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர். இதில் கேசவ் பிரசாத் மவுரியா 2வது முறையாக துணை முதல்வராக பதவியேற்றார்.

தேர்தலில் தோல்வி

தேர்தலில் தோல்வி

ஆனால் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அவர் தோலிவியடைந்தது குறிப்பிடத்தக்கது. 7,337 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளரான பல்லவி படேலிடம் கேசவ் பிரசாத் மவுரியா தோல்வியடைந்தார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "சிரத்து சட்டசபை தொகுதி மக்களின் முடிவை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன், ஒவ்வொரு தொண்டர்களின் கடின உழைப்பிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், வாக்கு வடிவில் ஆசி வழங்கிய வாக்காளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கேசவ் பிரசாத் மவுரியா பதிவிட்டிருந்தார்.

செல்வாக்கு என்ன ?

செல்வாக்கு என்ன ?

தேர்தலில் தோற்றாலும் அவருக்கு பாஜக தலைமை மீண்டும் பதவியை கொடுக்க என்ன காரணம்? கட்சியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு என்ன ? அவரது அரசியல், வரலாறு, பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கேசவ் பிரசாத் மௌரியா 1969ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அன்று கௌசாம்பி மாவட்டத்தில் தனபதி தேவி மற்றும் மறைந்த ஷியாம்லால் மவுரியாவுக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை ஒரு விவசாயி மேலும் சிரத்து நகரில் ஒரு தேநீர் கடை வைத்திருந்தார். மவுரியாவுக்கு சுக் லால் மற்றும் ராஜேந்திர குமார் ஆகிய இரு சகோதரர்களும், சுமித்ரா தேவி, கமலேஷ் குமாரி மற்றும் ஆஷா தேவி ஆகிய மூன்று சகோதரிகளும் உள்ளனர்.

பேப்பர் பாயாக பணி

பேப்பர் பாயாக பணி

1985இல் ராஜ்குமாரி தேவியை மணந்தார் . இந்த தம்பதியருக்கு ஆஷிஷ் குமார் மௌரியா மற்றும் யோகேஷ் குமார் மௌரியா என்ற இரு மகன்கள் உள்ளனர். சிரத்து நகரில் உள்ள ஜூனியர் உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் ஓசாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியிலும் பயின்ற அவர், நிதி நெருக்கடி காரணமாக குடும்பத்தை நடத்த, அவர் செய்தித்தாள்களை விற்று, டீ கடையில் தனது தந்தைக்கு உதவினார். பின்னர், பிரயாக்ராஜில் நடந்த இந்து சாகித்திய சம்மேளனத்தில் ஹிந்தி இலக்கியம் பயின்றார்.

ஆர்எஸ்எஸ்-ல் சேவை

ஆர்எஸ்எஸ்-ல் சேவை

1980களில் இருந்து, கேசவ் பிரசாத் மௌரியா ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) ஆகியவற்றுடன் தொடர்புடையவர். பசு பாதுகாப்பு மற்றும் ராம ஜென்மபூமி இயக்கங்களின் போது முக்கிய பங்காற்றினார். 1990ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கர் சேவக் குழுவிற்கு தலைமை தாங்கினார். 2012ஆம் ஆண்டில் சிரத்து தஹ்சீலின் முதல் பாஜக எம்எல்ஏவாக மவுரியா இருந்தார். பாஜகவின் பூல்பூர் எம்.பி.யாக இருந்த அவர், பொதுப்பணித் துறை (PWD), உணவு பதப்படுத்துதல், கேளிக்கை வரி மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சகங்களுக்குத் தலைமை வகித்தார்.

தேர்தல் வரலாறு

தேர்தல் வரலாறு

2014ல் புல்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதற்கு முன், 2002, 2007 மற்றும் 2012 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டார். 2016 ஆம் ஆண்டு உ.பி.யில் பாஜகவின் மாநிலத் தலைவராக மௌரியா நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, அவர் மாநிலத்தின் துணை முதல்வரானார். இந்நிலையில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு பாத்திரமான அவருக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு துணை முதல்வர்

மற்றொரு துணை முதல்வர்

யோகி அரசின் மற்றொரு துணை முதல்வராம்ன பிரஜேஷ் பதக் லக்னோ கான்ட் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 39512 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சியின் ராஜு காந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார். 2017 சட்டமன்றத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில்அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பதக் 25 ஜூன் 1964 அன்று உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் பிறந்த அவர் தொழில் ரீதியாக வழக்கறிஞர். 2004-2009 வரை உன்னாவ் நாடாளுமன்றத் தொகுதியின் மக்களவை எம்பியாகவும் இருந்தார்.

யோகியின் முக்கிய அமைச்சர்

யோகியின் முக்கிய அமைச்சர்

அவர் முந்தைய யோகி அரசாங்கத்தில் சட்டமன்றம், நீதி மற்றும் கிராமப்புற பொறியியல் சேவையின் கேபினட் அமைச்சராக இருந்தார். 2004 இல், பதக் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். அடுத்த சில ஆண்டுகளில், உத்தரபிரதேசம் முழுவதும் கட்சியின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், லக்னோவில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+